மனுஷன் எப்படி வாழணும்னு சொன்ன எம்.ஜி.ஆர்.. பிறந்தநாளை முன்னிட்டு வீடியோவை ஷேர் செய்த விவேக்!

Recommended Video

மனுஷன் எப்படி வாழணும்னு சொன்ன எம்.ஜி.ஆர்.. பிறந்தநாளை முன்னிட்டு வீடியோவை ஷேர் செய்த விவேக்! - வீடியோ

சென்னை: புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் 103வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு சின்னக் கலைவாணர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் மனிதன் எப்படி வாழ வேண்டும் என பேசிய வீடியோவை ஷேர் செய்துள்ளார்.

நடிகர் விவேக் ஷேர் செய்த அந்த வீடியோவுக்கு ரசிகர்களிடம் இருந்து பாராட்டுக்கள் குவிகின்றன.

எம்.ஜி.ஆர் பிறந்தநாள்

எம்.ஜி.ஆர் பிறந்தநாள்

இலங்கையில் உள்ள கண்டியில் 1917ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதி பிறந்த எம்.ஜி.ஆர்., சிறு வயதில் இருந்து குடும்ப வறுமையின் காரணமாக தமிழ்நாட்டில் நாடகங்களில் நடித்து துணை நடிகராக சினிமாவில் அறிமுகமாகி, தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் நடிகராக வளர்ந்து தமிழ் நாட்டின் முதலமைச்சராக மாபெரும் சாதனையை படைத்தார். எம்.ஜி.ஆரின் 103வது பிறந்தநாள் இன்று தமிழகமெங்கும் கொண்டாடப்படுகிறது.

விவேக் ட்வீட்

"இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்; இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்! வாழ்க MGR புகழ்.( அவர் பேசி இருப்பதைக் கேட்கவும்)" என ட்வீட் போட்டு அந்த வீடியோவையும் ஷேர் செய்துள்ளார்.

இனி எவரும் பிறக்கப்போவதில்லை

வறுமையில் தொடங்கி தன் கடின உழைப்பால் உயர்ந்து தான் ஈட்டிய செல்வத்தை இயன்றளவு இல்லாதோருக்கு கொடுத்து உதவி, இறந்து 33 ஆண்டுகள் ஆன பின்பும் மக்களின் மனதில் மறையாமல் வாழ்த்து கொண்டிருக்கும் இவர்போல எவரும் இந்த நிமிடம் வரை பிறந்ததில்லை.. இனி என்றும் எப்போதும் பிறக்கப் போவதும் இல்லை. என இந்த ரசிகர் கமெண்ட் செய்துள்ளார்.

நியாய விலைக்கடை

நியாய விலைக்கடைகளை அரசு ஒருபுறம் திறக்கிறது என்றால், அநியாய விலைக்கடைகள் இருக்கிறது என்று பொருள் என எம்.ஜி.ஆர் சொன்ன வாசகத்தை குறிப்பிட்டு இந்த ரசிகர் கமெண்ட் செய்துள்ளார்.

இவர் போல யாரென்று

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்; இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்! என்ற எம்.ஜி.ஆரின் பாடல் அடங்கிய வீடியோவை பதிவிட்டுள்ளார் இந்த தீவிர எம்.ஜி.ஆர் ரசிகர்.

மூன்றெழுத்து மந்திரம்

மூன்றெழுத்து மந்திரம் எம்.ஜி.ஆர் என இந்த ரசிகர் எம்.ஜி.ஆர் குறித்து புகழ்ந்துள்ளார்.

மாமனிதர்

எம்.ஜி.ஆர் மறைந்து 30 ஆண்டுகளுக்கு மேலாகியும் அவரது புகழ் இன்றளவும் மக்களிடையே மறையவில்லை. தனது பேச்சில் சொன்னது போல எம்.ஜி.ஆருக்கு இன்றளவும் மன்றங்களும், ரசிகர்களும், மக்கள் மனதில் இடமும் இருக்கிறது. எம்.ஜி.ஆர் மிகச்சிறந்த மனிதர் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X