மேனேஜரை நீக்கிய யோகி பாபு... காரணம் என்ன... அவரே வெளியிட்ட ஆடியோ
சென்னை : நடிகர் யோகிபாபு சிறப்பான பல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
முன்னணி கதாநாயகர்களின் படங்களில் நடிப்பதுடன் ஹீரோவாகவும் அவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தன்னுடைய மேனேஜரை நீக்கியுள்ளதாக அவர் ஒரு ஆடியோ மூலம் தெரிவித்துள்ளார்.

காமெடி நடிகர் யோகிபாபு
நடிகர் யோகிபாபு தமிழ் சினிமாவின் பரபரப்பான காமெடி நடிகராக உள்ளார். விஜய்யின் பீஸ்ட் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் இவர் நடித்து வருகிறார். தொடர்ந்து முக்கிய நடிகர்களுடன் இணைந்து நடித்துவரும் இவர், ஹீரோவாகவும் மண்டேலா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

ரசிகர்கள் பாராட்டு
நடிகர்கள் விவேக், சந்தானம், வடிவேலு ஆகியோர் இல்லாத குறையை தனது டைமிங் காமெடி மூலம் நிவர்த்தி செய்து வருகிறார் யோகி பாபு. கோலமாவு கோகிலா போன்ற படங்களில் இவரது நடிப்பு ரசிகர்களின் பாராட்டிற்கு உள்ளானது.

கோலமாவு கோகிலா படம்
அந்தப் படத்தில் ஹீரோ இல்லாத குறையை போக்கினார் யோகி பாபு. நயன்தாராவிற்கு இணையாக அவரது நடிப்பு படத்தில் காணப்பட்டது. படத்தில் நயன்தாராவை காதலிக்கும் இளைஞராக நடித்திருந்தார். அவருக்கு டூயட் பாடலும் கொடுக்கப்பட்டிருந்தது.

மேனேஜரை மாற்றிய யோகிபாபு
கோலிவுட்டின் முன்னணி காமெடி நடிகராக இருந்துவரும் யோகிபாபு தற்போது ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனது மேனேஜர் குடும்ப சூழல் காரணமாக தன்னிடம் இருந்து விலகியுள்ளதாக தெரிவித்துள்ளார். அதனால் இனிவரும் காலங்களில் தன்னுடைய நடிப்பு குறித்த எந்த விஷயமாக இருந்தாலும் தன்னை தொடர்பு கொள்ளவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேனேஜர் சசி நீக்கம்
அவருடைய படங்கள் உள்ளிட்டவற்றில் சிறப்பான செயல்பாடுகளை அளித்துவந்த சசி என்பவர் குறித்தே யோகிபாபு இவ்வாறு கூறியுள்ளார். சசியின் குடும்ப சூழல் காரணமாக அவர் தன்னிடம் இருந்து விலகியுள்ளதாக யோகிபாபு தெரிவித்துள்ளார். உண்மையான காரணத்தை அவர் தனது ஆடியோவில் வெளிப்படுத்தவில்லை.


Click it and Unblock the Notifications











