விருதுகளை அளிக்குவிக்கும் யோகி பாபு..இப்போ எந்த படத்துக்கு தெரியுமா ?

சென்னை :யோகிபாபு நடித்த மண்டேலா திரைப்படம் மிக பிரபல விருதான ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் இடம் பிடித்திருப்பது அனைவரும் அறிந்த விஷயம்.

இந்த மகிழ்ச்சியான நேரத்தில் யோகிபாபுவின் அடுத்த திரைப்படத்திற்கும் விருது கிடைத்துள்ளது. யோகிபாபு அடுத்து நடிக்க உள்ள திரைப்படம் மீன் குழம்பு.

இத்திரைப்படத்தை சமீபத்தில் வெளியாகி அனைவரின் பாராட்டையும் பெற்ற சின்னஞ்சிறு கிளியே திரைப்படத்தின் இயக்குனர் சபரிநாதன் முத்துப்பாண்டியன் இயக்குகிறார்.

பிளாக் யோகி

பிளாக் யோகி

யோகி என்ற படத்தின் மூலம் அறிமுக மான யோகிபாபு,பல படங்களில் நடித்து தற்போது முன்னணி காமெடி நடிகராக வளம் வந்து கொண்டு இருக்கிறார்என்பது அனைவரும் அறிந்ததே.ஜெயிப்பதற்கு நிறமும்,தோற்றமும் முக்கியம் இல்லை என்று நிரூபித்தவர் தான் யோகி பாபு.கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் இவர்.

தனி ரூட்

தனி ரூட்

கவுண்டமணி,செந்தில்,வடிவேலு,விவேக், போன்ற முன்னணி காமெடி நடிகர்கள் லிஸ்டில் தன்னையும் நிலைநிறுத்திக்கொண்டார் யோகி.ஆரம்ப காலத்தில் தன்னை பற்றி பல விமர்சனங்கள் பேசப்பட்டாலும்,அதை அனைத்தையும் பொடிப்பொடியாக நொறுக்கி இன்று காமெடி கதாபாத்திரத்தில் மட்டும் இல்லாமல் ஹீரோ ரோலையும் சேர்த்தே செய்து வருகிறார்.

கோலமாவு கோகிலா

கோலமாவு கோகிலா

நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில், லேடி சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடித்த படம் தான் கோலமாவு கோகிலா.இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் மட்டும் இல்லாமல் நயன்தாராவுடன் சேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைக்காத பல முன்னணி நடிகர்களும் பொறாமை படும் அளவிற்கு வெற்றி பெற்றார்.அதன் பிறகு ஹீரோவாகவும் சில படத்தில் நடித்தார்.

Recommended Video

Yogi Babu Cricketer Natarajan சந்திப்பில் நடந்த செம்ம கலாட்டா | IPL
மண்டேலா

மண்டேலா

மண்டேலா படத்தில் இவரது நடிப்பும்,கதையும் பார்ப்பவர்களை மிரள செய்தது.மேலும் இப்படம் மிக பிரபல விருதான ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் இடம் பிடித்துள்ளது.இப்போது யோகிபாபுவின் அடுத்த திரைப்படத்திற்கும் விருது கிடைத்துள்ளது. அடுத்து இவர் நடிக்க உள்ள திரைப்படம் மீன் குழம்பு.இத்திரைப்படத்தின் திரைக்கதை சிறந்த பிளாக் காமெடி திரைக்கதை என்ற விருதை பிர்சமுண்டா இண்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலில் வென்றுள்ளது. மேலும் கைவசம் கிட்டத்தட்ட 25 படங்களுக்கு மேல் வைத்துள்ளார் யோகி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X