நண்பேன்டா... 'லெஜண்ட்'டுக்கு தோஸ்த் ஆனார் யோகி பாபு

By

சென்னை: சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணன் அருளின் நண்பனாக நடிக்கிறார் காமெடி நடிகர் யோகி பாபு.

லெஜண்ட் சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் அருள், விளம்பர படங்களில் நடித்து வந்தார். இப்போது அவர் ஹீரோவாக நடித்து வருகிறார். ஹீரோவாக நடிக்கும் படத்தின் தொடக்க விழா சென்னையில் நடந்தது.

Comedy actor Yogi babu has joined saravanan aruls movie

சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களில் சரவணன் அருளை ஆட வைத்த, இயக்குநர்கள் ஜேடி - ஜெர்ரி இணைந்து இந்தப் படத்தை இயக்குகின்றனர். இவர்கள் உல்லாசம், விசில் படங்களை ஏற்கனவே இயக்கியவர்கள்.

கீத்திகா திவாரி

Comedy actor Yogi babu has joined saravanan aruls movie

வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். சரவணன் ஜோடியாக, நயன் தாரா உள்ளிட்ட முன்னணி ஹீரோயின்கள் நடிப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் அவர்கள் நடிக்கவில்லை. கீத்திகா திவாரி எனும் மாடல் ஒப்பந்தமாகியுள்ளார்.

ரசிகர் மன்றம்

Comedy actor Yogi babu has joined saravanan aruls movie

அதற்குள்ளாகவே, சரவணன் அருள் பெயரில் ரசிகர் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. உழைப்பின் கதாநாயகன் அருள் சரவணன் மாநில தலைமை ரசிகர் மன்றம் என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த மன்றத்தின் போஸ்டர்கள் சென்னையில் பரபரப்பாக ஒட்டப் பட்டிருந்தன. இந்த போஸ்டர், சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது.

காமெடி யோகி பாபு

இந்தப் படத்தில் சரவணன் அருளுடன் பிரபு, விவேக் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்நிலையில் காமெடி நடிகர் யோகி பாபுவும் இதில் இணைந்துள்ளார். அவர் சரவணன் அருளின் நண்பராக படத்தில் நடிக்கிறார். காமெடி கேரக்டரில் அவர் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X