அட..சூப்பர் தகவலா இருக்கே..ஜெயிலர் படத்தில் இணையும் பிரபலம்!
சென்னை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய நடிகர் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 169 திரைப்படத்திற்கு ஜெயிலர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஓய்வுபெற்ற ஜெயிலராக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் ஐதராபாத்தில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான படம் அண்ணாத்த. இயக்குநர் சிவா இயக்கியிருந்த இப்படத்தில் நயன்தாரா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், மீனா, சூரி, பிரகாஷ் ராஜ், சதீஷ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தாலும், இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதன் காரணமாக அடுத்த படத்திற்கான கதை தேர்வில் மிகவும் கவனமாக செயல்பட்டு வந்தார் ரஜினி.

ஜெயிலர்
இறுதியில், பீஸ்ட் பட இயக்குநர் நெல்சனுக்கு தனது 169-வது படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்தார் ரஜினி. தலைவர் 169 படத்துக்கு ஜெயிலர் என பெயர்வைக்கப்பட்டிருக்கும் நிலையில், இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஓய்வுபெற்ற ஜெயிலராக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு சிறையில் தான் நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இணையும் பிரபலம்
இந்நிலையில், இப்படத்தில் நகைச்சுவை நடிகர் யோகிபாபு இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. யோகிபாபு ஏற்கனவே முருகதாஸ் இயக்கத்தில் உருவான தர்பார் திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்துள்ளார். இதையடுத்து, ஜெயிலர் திரைப்படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் யோகி பாபு நடிக்க உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிட உள்ளது.
Recommended Video

'மெடிக்கல் மிராக்கல்'
தர்மபிரபு, கூர்கா, மண்டேலா திரைப்படங்களில் ஹீரோவாக நடித்துள்ள யோகி பாபு. இயக்குநர் ஜான்சன் இயக்கி தயாரிக்கும் 'மெடிக்கல் மிராக்கல்' படத்தில் யோகிபாபு நாயகனாக நடிக்கிறார். தர்ஷா குப்தா நாயகியாக நடிக்க, மன்சூர் அலிகான், சேசு, கல்கி, மதுரை முத்து, டி.எஸ்.ஆர், நாஞ்சில் சம்பத், வினோத், பாலா, டைகர் தங்கதுரை, சித்தார்த் விபின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











