Actor Yogibabu: அடுத்தடுத்த ஹீரோ சப்ஜெக்ட்.. போலீசாக நடிக்கும் யோகிபாபு.. புதிய பட பூஜை!

சென்னை: நடிகர் யோகிபாபு காமெடியனாக அடுத்தடுத்த படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ரஜினி, விஜய், அஜித் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ள யோகிபாபு, தமிழில் மோஸ்ட் வான்டட் காமெடியனாக தன்னுடைய உடல்மொழி மற்றும் கவுன்டர் காமெடி மூலம் கலக்கி வருகிறார்.

கதையின் நாயகனாகவும் அவ்வப்போது நடித்துவரும் யோகிபாபு லக்கிமேன் உள்ளிட்ட படங்களில் லீட் கேரக்டரில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். தற்போது பூமர் அங்கிள், ஐகோர்ட் மகாராஜா, வானவன், சட்னி சாம்பார் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்துவரும் யோகிபாபு, அடுத்ததாக 'கான்ஸ்டபிள் நந்தன்' என்ற படத்திலும் ஹீரோவாக களமிறங்கியுள்ளார். படத்தில் முதல்முறையாக போலீசாக நடித்துள்ளார் யோகிபாபு.

Yogi babu tamil cinema

நடிகர் யோகிபாபு: காமெடியனாக விஜய், ரஜினிகாந்த், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடி கலாட்டா செய்து வருபவர் யோகிபாபு. தன்னுடைய பாடி லாங்குவேஜ் மற்றும் டைமிங் காமெடி மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து காமெடி மன்னனாக வலம்வந்துக் கொண்டிருக்கும் யோகி பாபு, அவ்வப்போது ஹீரோவாகவும் படங்களில் நடித்து கவனத்தை பெற்று வருகிறார். அந்த வகையில் லக்கிமேன், பொம்மை நாயகி போன்ற படங்கள் மிகப்பெரிய கவனத்தை பெற்றுள்ளன. இதனிடையே தற்போது பூமர் அங்கிள், ஐகோர்ட் மகாராஜா, வானவன், சட்னி சாம்பார் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

போலீசாக நடிக்கும் யோகிபாபு: தமிழ் சினிமாவில் பல முன்னணி நட்சத்திரங்கள் போலீஸ் கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றுள்ள நிலையில் யோகிபாபுவும் அந்த வரிசையில் தற்போது இணைந்துள்ளார். பல தீவிரமான கதைக்களங்களில் கதையின் நாயகனாக நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி வரும் நடிகர் யோகி பாபு, அடுத்ததாதக 'கான்ஸ்டபிள் நந்தன்' படத்தில் கான்ஸ்டபிளாக நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்தின்மூலம் ஒரு நடிகராக அடுத்த கட்டத்தை அவர் எட்டவுள்ளதாக படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கான்ஸ்டபிள் நந்தன் படம்: கான்ஸ்டபிள் நந்தன் படத்தை ஷங்கர் பிக்சர்ஸ் சார்பில் ஷங்கர் திருவண்ணாமலை தயாரித்துள்ளார். இயக்குநர்கள் சுந்தர் சி, சசிகுமார், களஞ்சியம் உள்ளிட்டவர்கள் படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ள பூபால நடேசன் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்றைய தினம் திருவண்ணாமலையில் பூஜையுடன் துவங்கியுள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் சங்கர் யோகி பாபு போன்ற தலைசிறந்த நடிகருடன் பணியாற்றுவது பெருமையாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

போட் பட ரிலீஸ் அறிவிப்பு: இதனிடையே இயக்குநர் பூபால நடேசன், கான்ஸ்டபிள் நந்தன் படம் யோகிபாபு வாழ்க்கையில் மிகச்சிறந்த படமாக அமையும் என்றும் அவருக்கு எதிரான மற்றொரு கேரக்டரும் படத்தில் உள்ளதாகவும் விரைவில் அந்த கேரக்டரில் நடிக்கவுள்ள நடிகர் குறித்து அறிவிப்போம் என்றும் கூறியுள்ளார். சிம்புதேவன் இயக்கத்தில் யோகிபாபு நடித்துள்ள போட் படம் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X