நானே வருவேன் படத்தின் புதிய அப்டேட்... தனுஷுடன் இணைந்த காமெடி நடிகர்

சென்னை : நடிகர் தனுஷ் அவரது அண்ணன் செல்வராகவனுடன் இணைந்து நானே வருவேன் படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்தப் படத்தின் சூட்டிங் நேற்றைய தினம் துவங்கியுள்ளது. இதன் புகைப்படங்களை நேற்றைய தினம் படக்குழுவினர் பகிர்ந்தனர்.

இந்நிலையில் இந்தப் படத்தில் இணையவுள்ள காமெடி நடிகர் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ் தற்போது திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் லண்டன் தாதாவாக நடித்திருந்தார் தனுஷ்.

திருச்சிற்றம்பலம் படம்

திருச்சிற்றம்பலம் படம்

தமிழ் மட்டுமின்றி ஹாலிவுட், பாலிவுட் மற்றும் டோலிவுட்டிலும் இவர் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். தற்போது திருச்சிற்றம்பலம் படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார் தனுஷ். மேலும் மாறன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

 நானே வருவேன் படம்

நானே வருவேன் படம்

இந்நிலையில் தன்னுடைய அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என்ற படத்தில் தற்போது இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் துவங்கவிருந்த நிலையில், தனுஷ் மற்றும் செல்வராகவன் இருவரும் படங்களில் பிசியாக இருந்த நிலையில் படப்பிடிப்பு தள்ளிப் போனது.

நேற்று படப்பிடிப்பு துவக்கம்

நேற்று படப்பிடிப்பு துவக்கம்

இந்நிலையில் நேற்றைய தினம் இதன் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இதுகுறித்து செல்வராகவன் மற்றும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு ஆகியோர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தனர். மேலும் சூட்டிங் துவங்கியதற்கான புகைப்படங்களையும் படக்குழு பகிர்ந்தது.

தனுஷுடன் மீண்டும் இணைந்த யோகிபாபு

தனுஷுடன் மீண்டும் இணைந்த யோகிபாபு


இந்தப்படத்தின் நடிகர், நடிகைகள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தில் காமெடி நடிகர் யோகிபாபு தற்போது இணைந்துள்ளார். கர்ணன் படத்திற்கு பிறகு தற்போது தனுஷுடன் அவர் இணைந்துள்ளார். படத்தில் நாயகியாக இந்துஜா இணைந்துள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் படப்பிடிப்பு

சென்னையில் படப்பிடிப்பு

சென்னையில் இதன் படப்பிடிப்புகள் திட்டமிடப்பட்டுள்ளன. படத்தின் இசையமைப்பை யுவன் சங்கர் ராஜா கவனித்து வருகிறார். செல்வராகவன் -தனுஷ் மற்றும் யுவன் சங்கர் ராஜா கூட்டணி எப்போதும் ரசிகர்களுக்கு பிடித்தமானதாக அமையும். இதே உற்சாகத்தை ரசிகர்களுக்கு இந்த கூட்டணி கொடுக்கும் என்று நம்பலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X