அந்த வானத்தை போல மனம் படைத்த மன்னவனே.. கேப்டன் விஜயகாந்தை சந்தித்த யோகி பாபு!
சென்னை : நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தை காமெடி நடிகர் யோகி பாபு சந்தித்துள்ளார்.
2009ம் ஆண்டு அமீர் நாயகனாக நடித்த 'யோகி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் பாபு. அந்தப் படத்தின் தலைப்பே அவருடைய பெயரின் அடைமொழியாக வைத்துக்கொண்டார் யோகி பாபு.
அன்று முதல் இன்று வரை தமிழ் ரசிகர்களின் மனதில் நிரந்தர இடத்தை பிடித்து இன்று குடும்பத்தில் ஒருவராக இருக்கிறார் யோகிபாபு.

யோகிபாபு
பையா, கலகலப்பு, அட்டகத்தி, பட்டத்து யானை, சென்னை எக்ஸ்பிரஸ், சூது கவ்வும், வீரம், மான் கராத்தே, அரண்மனை, யாமிருக்க பயமே போன்ற படங்களில் நகைச்சுவை நடிகராக கலக்கிய யோகி பாபு. தர்மபிரபு திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மண்டேலா, கூர்கா உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.

முன்னணி நடிகர்
2017ம் ஆண்டு 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த யோகி பாபு விஜய்யுடன் முதல் முறையாக இணைந்து மெர்சல் படத்தில் நடித்தார். அதிலிருந்து சர்கார், பிகில், பீஸ்ட் என வரிசையாக விஜய்யுடன் நடித்து வரும் யோகிபாபு, தளபதியின் அடுத்து வரவிருக்கும் படமான வாரிசு படத்திலும் நடித்துள்ளார். அஜித், ரஜினி என ஸ்டார் நடிகர்களின் படங்களில் நடித்து இன்று முன்னணி நகைச்சுவை நடிகராக இருக்கிறார் யோகி பாபு.

வானத்தை போல மனம் படைத்த மன்னவனே
இந்நிலையில் நடிகர் யோகிபாபு தனது ட்விட்டர் பக்கத்தில், விஜய்காந்தை சந்தித்து ஆசி பெற்ற வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும், அந்த வீடியோவில், 'சின்னக்கவுண்டர்' படத்தில் வரும் வானத்தை போல மனம் படைத்த மன்னவனே என்கிற பாடல் ஒலிக்கிறது. தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாததால் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். அவர் விரைவில் பழையபடி வெளியே வர வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

பல படங்களில் பிஸி
பூச்சாண்டி, சலூன், அயலான், பொம்மை நாயகி, வெள்ளை உலகம், தீயோர்க்கு அஞ்சேல், சூரப்புலி, தமிழரசன், சுந்தரா டிராவல்ஸ் 2, காசேதான் கடவுளடா, தலை நகரம் 2, வாரிசு, ஜெயிலர் போன்ற போன்றபடங்களை கைவசம் வைத்துக்கொண்டு பிஸியாக நடித்து வருகிறார். அடுத்த ஆண்டு மட்டும் யோகிபாபுவின் நடிப்பில் 20க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாக உள்ளன.


Click it and Unblock the Notifications











