கட்டுப்பாட்டை இழந்த கார்.. விபத்தில் சிக்கிய யோகிபாபு.. ரசிகர்கள் அதிர்ச்சி!
சென்னை: சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை மூன்று மணி அளவில், பெங்களூரு நோக்கி நகைச்சுவை நடிகர் யோகி பாபு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது வாலாஜாபேட்டை அருகே கார் சென்று கொண்டிருந்த போது, கார் கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலை நடுவே உள்ள தடுப்பு மீது ஏறி விபத்துக்குள்ளானது.
விஜய் தொலைக்காட்சி பல நடிகர்களை இந்த தமிழ் சினிமாவிற்கு அடையாளம் காட்டி உள்ளது. அப்படி விஜய் டிவியில் ஒளிபரப்பான 'லொள்ளு சபா' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார் நடிகர் யோகி பாபு. அதைத்தொடர்ந்து அமீர் ஹீரோவாக நடித்த 'யோகி' படத்தில் போட்டோ கிராஃப்பராக நகைச்சுவை ரோலில் நடித்தார். அந்த படத்தை தொடர்ந்து யோகி படத்தின் தலைப்பையே தன்னுடைய பெயருடன் இணைந்துக்கொண்டார்.

அந்த படத்தை தொடர்ந்து மான் கராத்தே, அரண்மனை, சென்னை எக்ஸ்பிரஸ், சூது கவ்வும் என பல வெற்றிப்படத்தில் நடித்து வந்த யோகி பாபு, தற்போது காமெடி நடிகராக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் கடைசியாக 'போட்' படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தை தொடர்ந்து, மண்ணாங்கட்டி, வானவன் மற்றும் ஜோரா கைய தட்டுங்க போன்ற பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த படம் மட்டுமில்லாமல், 'டிராப் சிட்டி' என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை திருச்சியை சேர்ந்த பிரபல இயக்குநர் டெல் கே.கணேசன் இயக்குகிறார். இந்த படத்தில், ஆங்கில ராப் பாடல் ஒன்றுக்கு மைக்கேல் ஜாக்சன் கெட்டப்பில் டான்ஸ் ஒன்று இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நடிகர் யோகி பாபு சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை 3 மணி அளவில் பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்த போது, வாலாஜாபேட்டை சுங்கச்சாவடியை கார் கடந்தபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலை நடுவே உள்ள தடுப்பு மீது ஏறி விபத்துக்குள்ளானது. இதில் எந்தவிதமான காயமும் இல்லாமல் யோகி பாபு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். அதன் பின் வேறு ஒரு காரை வரவழைத்து அங்கிருந்து சென்றுள்ளார். யோகி பாபு விபத்தில் சிக்கியதாக செய்திகள் வெளியானதை அடுத்து, ஊடகம் ஒன்றில் பேசிய யோகிபாபு, அது சாதாரண விபத்துதான், யாருக்கும் எதுவும் ஆகவில்லை என்றார்.


Click it and Unblock the Notifications











