Boat teaser: படகுக்குள் நடக்கும் போராட்டம்..யோகி பாபுவின் 'போட்' பட டீசர் வெளியானது!

சென்னை: சிம்புதேவன் இயக்கத்தில் நடிகர் யோகிபாபு நடித்துள்ள போட் திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

நடிகர் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில், கௌரி ஜி கிஷன், எம் எஸ் பாஸ்கர், சின்னி ஜெயந்த், சாம்ஸ், மதுமிதா, கொள்ள புலி லீலா, அக்ஷதா தாஸ், உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

comedy actor yogi babu starrer boat movie teaser released

ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

யோகிபாபுவின் போட்: இம்சை அரசன் 23-ம் புலிகேசி படம் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் சிம்புதேவன் அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் படத்தை இயக்கினார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, 2015ம் ஆண்டு தளபதி விஜய்யை வைத்து புலி படத்தை இயக்கியிருந்தார்.

இயக்குநர் சிம்புதேவன்: புலி படத்திற்கு பிறகு கிட்டத்த 7 வருடங்களுக்குப் மேலாக எந்த படத்தையும் இயக்காமல் இருந்த இயக்குநர் சிம்பு தேவன் தற்போது போட் என்ற படத்தை இயக்கி உள்ளார். யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி, சோஷியல் மீடியாவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கவனம் பெற்ற டீசர்: அந்த டீசரில், இந்தியாவை பிரிட்டிஷ் ஆட்சி செய்த சமயம். ஜப்பான் மெட்ராஸ் மாகாணத்தின் மீது குண்டுகளை வீசியது. உயிர்பிழைக்க முன்பின் தெரியாத 10 பேர் ஒரு படகில் ஏரி வங்காள விரிகுடாவில் ஒதுங்குகின்றனர் என கவுதம் வாசுதேவ் மேனனின் குரலில் போட் படத்தின் டீசர் தொடங்கி உள்ளது.

வித்தியாசமான கதை: இந்த பயணத்தின் போது அவர்கள் சந்தித்த சிக்கல்கள், கடைசியில் போட்டில் இருந்து அவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள்? இறுதியில் என்ன நடந்தது என்பதை யூகிக்க முடியாத கதைகளத்தில் இப்படத்தை சிம்பு தேவன் இயக்கியுள்ளார். "பாகவதர் கானா பாட்டெல்லாம் பாட மாட்டாரா?" என்ற யோகிபாபுவின் டைமிங் காமெடியும் டீசரில் இடம் பெற்றுள்ளதால், இந்த படம் நிச்சயம் ரசிகர்களை மகிழ்விக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமீர்கானை கவர்ந்த கதை: இந்த டீசரை இணையத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கான் வெளியிட உள்ளார். மேலும் விஜய் சேதுபதி, நாக சைதன்யா, கிச்சா சுதீப் மற்றும் பிருத்விராஜ் உள்ளிட்டவர்களும் அந்தந்த மொழியில் இணையத்தில் வெளியிட்டனர். இந்த படத்தின் கதையைக் கேட்டு வியப்படைந்த அமீர்கான் டீசரை வெளியிட சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X