Don't Miss!
- Finance
அய்யோ இது மட்டும் நடந்திட கூடாது.. இந்திய மக்கள் பீதி..!
- News
தேநீர் விருந்து.. தொலைபேசி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் அழைப்பு.. திமுக முடிவு என்ன?
- Lifestyle
இந்த விஷயங்கள படுக்கையில் செய்வதன் மூலம் நீங்க வேற லெவலில் செக்ஸ் வாழ்க்கையை அனுபவிக்கலாமாம்!
- Automobiles
பெட்ரோல் பைக் வச்சிருந்தா அத ஓரங்கட்டி வச்சிடுங்க.. இந்த இ-சைக்கிள்ல ஒரு கிமீ பயணிக்க வெறும் 5 பைசாதான் ஆகும்!
- Sports
அவர் டென்னிஸ் ஆடிட்டு இருக்காருங்க.. ஹர்திக் பாண்ட்யாவிடம் உள்ள ஸ்பெஷல் ஷாட்.. இர்ஃபான் புகழாரம்
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
- Technology
வாரே வா.. பிரபல நிறுவனத்தின் 42-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கி அதிரடி காட்டிய பிளிப்கார்ட்.!
கார்த்திகை தீபத்தையொட்டி பழனியில் பிரபல காமெடி நடிகர் யோகிபாபு சாமி தரிசனம்!
பழனி : கோலிவுட்டின் பிரபல காமெடி நடிகர் யோகிபாபு முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்.
இவரது அடுத்தடுத்த வெற்றிகளை அடுத்து கோலிவுட்டின் சூப்பர் ஹிட் ஹீரோக்கள் இவரது கால்ஷீட்டிற்காக காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது.
தீவிர முருகர் பக்தரான யோகிபாபு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அடுத்தடுத்து முருகர் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
கோலிவுட்டில் 13 ஆண்டுகள்.. சூர்யா 42 குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடிய யோகிபாபு!

காமெடி நடிகர் யோகிபாபு
கோலிவுட்டின் பிரபல காமெடி நடிகராக மாறியுள்ளார் யோகிபாபு. ரஜினி, விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இவர் இணைந்து நடித்துள்ளார். தற்போது சூர்யா 42 படத்திலும் இவர் நடித்து வருகிறார். சூர்யாவுடன் இவரது காம்பினேஷன் காட்சிகள் சென்னையில் எடுக்கப்பட்டு வருகிறது. இவரது கால்ஷீட்டிற்காக சூர்யா மற்றும் படக்குழுவினர் காத்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

ஹீரோவாகவும் மாஸ் காட்டும் யோகிபாபு
மண்டேலா உள்ளிட்ட படங்களில் ஹீரோவாகவும் இவர் நடித்துள்ளார். அடுத்தடுத்த ஹீரோ சப்ஜெக்ட்களில் இவர் கவனம் செலுத்தி வருகிறார். அஜித் படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஹெச் வினோத், யோகி பாபுவை வைத்து படமியக்கவுள்ளதாகவும் இந்தப் படத்தில் அப்பாவி திருடன் மற்றும் போலீஸ்காரருக்கு இடையிலான கதைக்களத்தை மையமாக வைத்து படமியக்கவுள்ளதாகவும் தனது சமீபத்திய பேட்டியில் ஹெச் வினோத் தெரிவித்துள்ளார்.

முருகர் பக்தர் யோகிபாபு
அடுத்தடுத்த படங்களில் இவர் பிசியாக நடித்து வருகிறார். தீவிர முருகர் பக்தரான யோகிபாபு, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அடுத்தடுத்த முருகர் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இவரது இந்தப் புகைப்படங்களில் அழகான முருகரின் பல்வேறு அம்சங்களை பார்க்க முடிகிறது.

பழனியில் சாமி தரிசனம்
இன்றைய தினம் கார்த்திகை தீபத்தையொட்டி பழனியில் யோகிபாபு சாமி தரிசனம் செய்துள்ளார். தொடர்ந்து ஏராளமான ரசிகர்கள் மற்றும் கோயில் நிர்வாகிகள் யோகிபாபுவுடன் கைக்குலுக்கி தங்களது உற்சாகத்தை பதிவு செய்தனர். பழனியில் ஏராளமான முருக பக்தர்கள் இன்றைய தினம் சாமி தரிசனம் செய்தனர். கார்த்திகை தீபத்தையொட்டி பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டன.

கிரிக்கெட் ஆடும் புகைப்படங்கள்
தன்னுடைய டைமிங் காமெடி மற்றும் உடல்மொழியால் அனைத்து தரப்பினரையும் கவர்ந்து வருகிறார் யோகிபாபு. இவருக்கு எப்போதுமே கிரிக்கெட்டில் ஆர்வம் அதிகம். சமீபத்தில் சித்தார்த்துடன் இணைந்து இவர் ஆடிய கிரிக்கெட்டின் புகைப்படங்களையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

ஹீரோவாக அடுத்தப்படம்
இனியாவுடன் யோகிபாபு இணைந்து ஹீரோவாக நடித்துள்ள தூக்குதுரை படம் விரைவில் ரிலீசாக உள்ளது. மூன்று காலகட்டங்களில் உருவாகியுள்ள இந்தப் படம் அட்வென்சர் த்ரில்லராக உருவாகியுள்ளது. ட்ரிப் படத்தை இயக்கிய டென்னிஸ் மஞ்சுநாத் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.