வடிவேலுவுடன் ரெட்டின் கிங்ஸ்லி.. இன்னும் எத்தனை காமெடி நடிகர்கள் கூட இருக்காங்கன்னு பாருங்க!
சென்னை: நடிகர் வடிவேலுவுடன் ஏகப்பட்ட காமெடி நடிகர்கள் சேர்ந்து நிற்கும் லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.
Recommended Video
மீம்ஸ் உலகின் கடவுள் என்றே வைகைப்புயல் வடிவேலுவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படம் மூலம் மீண்டும் நடிக்க வந்த வடிவேலுவுடன் ரெட்டின் கிங்ஸ்லி உள்ளிட்ட நகைச்சுவை நடிகர்கள் இருக்கும் புதிய புகைப்படம் வெளியாகி உள்ளது.

நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்
லண்டணில் இந்த படத்திற்காக சந்தோஷ் நாராயணன் ஸ்பெஷலாக இசையமைத்து வருகிறார். சில காட்சிகளையும் இயக்குநர் சுராஜ் லண்டனில் வடிவேலுவை வைத்து படமாக்கி உள்ளார் என தகவல்கள் வெளியாகின. விரைவில் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தை வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் வடிவேலு.

ரெட்டின் கிங்ஸ்லி
நாய்சேகர் படத்தில் வடிவேலுவுடன் எல்கேஜி, கோலமாவு கோகிலா, நெற்றிக்கண், டாக்டர், அண்ணாத்த என ஏகப்பட்ட படங்களில் காமெடியில் கலக்கி வரும் ரெட்டின் கிங்ஸ்லி இணைந்து நடித்து வருகிறார். இந்நிலையில், வடிவேலுவுடன் அவர் இணைந்து நிற்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.

நகைச்சுவை நடிகர்கள் சங்கமம்
ரெட்டிங் கிங்ஸ்லி மட்டுமின்றி லொள்ளு சபா மாறன், விஜய் டிவி ராமர் உள்ளிட்ட மேலும், சில காமெடி நடிகர்களுடன் வைகைப் புயல் வடிவேலு இருக்கும் செம கூலான புகைப்படம் தற்போது டிரெண்டாகி வருகிறது. ரெட்டின் கின்ஸ்லி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த புகைப்படத்தை ஷேர் செய்து வைரலாக்கி வருகிறார். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் ஷூட்டிங் முடிச்சிட்டு விமான நிலையத்துக்கு ரிட்டர்னா? இல்லை புதிய படப்பிடிப்புக்காக விமானத்தில் ஏறி புறப்படுறீங்களா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

செம ஃபன் இருக்கு
வடிவேலு மீண்டும் ஹீரோவாக நடித்து வரும் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் இத்தனை காமெடி நடிகர்கள் அவருடன் இணைந்து நடித்து வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், வேற லெவல் ஃபன் இருக்கும் போல படத்தில் என ரசிகர்கள் கமெண்ட் செய்து ஒரு நல்ல என்டர்டெயின்மென்ட்டுக்கு வெயிட் செய்து வருகின்றனர்.

நெக்ஸ்ட் என்ன
நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் முடித்த கையோடு மேலும், சில படங்களிலும் வடிவேலு நடிக்கப் போகிறார் என்றும் இப்போதே தயாரிப்பாளர்கள் அவரது கால்ஷீட்டுக்காக காத்திருக்கின்றனர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே சதீஷ் நடிப்பில் வெளியான நாய்சேகர் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு ஹிட் அடிக்காத நிலையில், ஒரிஜினல் நாய்சேகரின் சம்பவத்தை காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











