கையில் 10 பைசா இல்ல.. செத்தாக்கூட பரவாலனு நினைக்கிறான்.. பிந்து கோஷின் கண்ணீர் கதை!
சென்னை: 80 காலகட்டத்தில் மனோரமாவிற்கு இணையாக காமெடியில் கலக்கி வந்தவர் நடிகை பிந்துகோஷ். ரஜினி, கமல், என முன்னணி நடிகர்களுடன் 100க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்துள்ள பிந்து கோஷ், பிரபு நடித்த கோழி கூவுது படத்தில், ஆட்டம் பாட்டம் கூத்து என பட்டையை கிளப்பி இருப்பார். 76 வயதை தாண்டிய பிந்துவிற்கு பல நோய்களால் வீல் சேரில் அமர்ந்து வாழ்க்கையை கழித்து வருகிறார். மேலும், அன்றாட வாழ்க்கையில் கஷ்டப்படுவதாக பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.
அதில், நடப்பதற்கே நான் ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருக்கேன், பிபி இருக்கு, சுகர் இருக்கு, அதுவும் இல்லாம ஹார்ட் சர்ஜரி பண்ணாங்க. இந்த நிலைமையில், ஹாஸ்பிடல்ல போய் அட்மிட் ஆனானேன். அங்கு 40 ஆயிரம், 50ஆயிரம் கேக்குறாங்க. நான் வாழ்றதுக்கே கஷ்டப்பட்டுட்டு இருக்கும்போது என்னால் அவ்வளவு பணத்தை எப்படி கொடுக்க முடியும். இதுவரைக்கும் 3 லட்சம் ரூபாய் வரை செலவு செய்து விட்டேன். ஆனால், எதுவும் சரியாகல, முதல்வர் ஸ்டாலின் எனக்கு ஏதாவது உதவி செய்தால், நன்றாக இருக்கும்.

அனாதை மாதிரி இருக்கேன்: சினிமால நல்லா சம்பாதித்து சொந்த வீடு எல்லாமே இருந்தது ஆனா, அது எல்லாத்தையுமே பசங்களுக்காக விற்றுவிட்டேன். எனக்குன்னு நான் எதையுமே சேர்த்து வச்சுக்கவே இல்ல, புள்ளைங்க புள்ளைங்கன்னு எல்லாத்தையும் என்னுடைய பசங்களுக்காக கொடுத்தேன். ஆனால், இப்போ என்கிட்ட எதுவுமே இல்ல ஒரு அனாதை மாதிரி தான் இந்த வாழ்க்கையை நான் வாழ்ந்துகிட்டு இருக்கேன். என் மூத்த பையன் ஹைதராபாத்தில் கல்யாணம் ஆகி செட்டில் ஆயிட்டான். முன்பு எனக்கு உடம்பு முடியாமல் இருந்த போது, வந்து பார்த்து உதவி பண்ணிட்டு போனார். அதன் பிறகு, அவன் வரவே இல்ல. எத்தனை முறை போன் செய்தாலும் எடுக்கவில்லை. நான் செத்தா பரவாயில்லை என்கிற முடிவுக்கு வந்துவிட்டார்கள்.
வாடகைக்கூட தரமுடியல: நான் சினிமாவில் நடித்து சம்பாதித்துக் கொண்டிருந்தேன் அப்போது ஒரு படத்திற்கு ஆயிரம் முதல் 3000 ரூபாய் வரை வரும். நான் சம்பாதித்த பணத்தைவைத்துத்தான் சொந்தமாக வீடு கட்டினேன். அப்போது அனைவரும் என்னை நன்றாக பார்த்துக் கொண்டார்கள். அதன் பிறகு என்னுடைய உடல்நிலை முடியாமல் போனது, வீட்டில் ஒரு சண்டை வந்தது அதன் பிறகு அனைவரும் என்னை விட்டு போய்விட்டார்கள். அதன் பிறகு வீட்டை விற்றுவிட்டேன். இப்போது வாடகை வீட்டில் இருக்கிறேன், இந்த வீட்டுக்கு மாத வாடகை 7 ஆயிரம் ரூபாய், அதைக்கூட கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறேன்.
பத்து பைசா இல்ல: என்னுடைய இரண்டாவது மகன் தான் என்னை பார்த்துக்கொள்கிறான், அவனுக்கும் சரியான வேலை இல்லை வருமானமும் இல்லை, என்னை பார்த்துக்கொள்வதற்காக அவனும் ரொம்ப கஷ்டப்படுகிறான். நாங்கள் இப்போது, பணத்துக்காக ரொம்ப கஷ்டப்படுகிறோம். கையில பத்து பைசா கூட இல்ல. மருத்துவ உதவிக்காக நான் பலரிடம் உதவி கேட்டுவிட்டேன்,ஆனால், யாருமே எனக்கு உதவி செய்வதற்கு முன்வரவில்லை. சில வருடத்திற்கு முன் நான் மருத்துவமனையில் இருந்த போது லாரன்ஸ், விஷால் இருவர் மட்டும் தான் உதவி செய்தார்கள். அதன் பிறகு எந்த நடிகரும் எனக்கு உதவி செய்யவில்லை.
அப்போது என் நிலைமை ரொம்ப மோசமாக இருக்கிறது. என் சிகிச்சை செலவிற்கு 5 லட்சம் ரூபாய் தேவைப்படுகிது. அப்போது தான், ஒருவர் முதல்வர் ஸ்டாலிடம் உதவி கேட்க சொன்னாரு, அவரு கண்டிப்பா ஏதாவது உதவி பண்ணுவார், அதன் மூலமாக உடம்பை பார்த்துக்கலாம்னு சொன்னாங்க அதனால தான் அவர் கிட்ட நான் உதவி கேட்கிறேன் என்று பிந்து கோஷ் கண்ணீருடன் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











