ரூ.500 நான் வாங்கிய முதல் சம்பளம்…வடிவேலு பட நடிகை சொன்ன சுவாரஸ்ய தகவல்!
சென்னை: நகைச்சுவை நடிகையான தேவி ஸ்ரீ தனது சினிமா அனுபவம் குறித்து மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார்.
நீ வேணும்டா செல்லம், ஜாம்பவான், அசுரன், இந்திரலோகத்தில் நா அழகப்பன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் படம் மட்டுமில்லாமல் தெலுங்கு,கன்னடப் படங்களிலும் நடித்து வருகிறார்.
தற்போது இவர் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி அதில், தனது மகளை கதாநாயகியாக அறிமுகப்படுத்த உள்ளார்.

நடிகை தேவி ஸ்ரீ: நடிகை தேவி ஸ்ரீ யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது என் பல நாள் கனவு அந்த கனவை நிறைவேற்றியது என் அத்தைதான். படவாய்ப்பு தேடி பல இடங்களில் அலைந்தேன். அப்போது தான் சரத்குமார் நடித்த அரசு படத்தில் போலீஸ் கான்ஸ்டபிளாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் நான் வாங்கிய முதல் சம்பளம் வெறும் 500 ரூபாய் என்றார்.
பெயர் வைத்ததே அவர் தான்: நான் வடிவேலு, விவேக் சந்தானம் போன்ற பல நடிகர்களுடன் நடித்து இருக்கிறேன். ஆனால், எனக்கு மிகவும் பிடித்தமான நடிகர் விவேக் சார் தான், அவருக்கு மற்றவர்களுக்கு உதவி செய்யும் எண்ணம் அதிகம், படப்பிடிப்பில் எனக்கு டையலாக் எப்படி பேசவேண்டும் என்று அவர் தான் சொல்லித்தருவார். அது மட்டுமில்லாமல் தேவி ஸ்ரீ என்று பெயர் வைத்ததே அவர் தான்.
வடிவேலுவுடன் ஒரு படத்தில்: நான் வடிவேலு சாருடன் இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்தில் மட்டும் தான் நடித்து இருக்கிறேன். இரண்டாவது படத்திலும் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், அப்போது தான் விவேக் சாருடன் நடித்துக்கொண்டு இருந்ததால், அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. அதன் பிறகு வடிவேலுடன் நடிக்க வாய்ப்பு வரவில்லை.
திறமை இருந்தால் வாய்ப்பு வரும்: மாமன்னன் படத்தில் நகைச்சுவையை தாண்டி அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அவரின் நடிப்பு திரையில் பிரம்மிப்பாக இருந்தது. படத்தை பார்த்துவிட்டு அவருக்கு கால் பண்ணி வாழ்த்து சொன்னேன். நன்றி மா என்றார். தற்போது ஒரு படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறேன் வாய்ப்பு வந்தால் சொல்கிறேன் என்றார். படவாய்ப்பு வேண்டும் என்றால் நாம் தான் முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டுமே தவிர அவரால் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று புலம்பக்கூடாது. திறமை இருந்தால் நிச்சயம் பட வாய்ப்பு தேடி வரும் என்றார்.


Click it and Unblock the Notifications











