twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொரோனா ஏற்பட்டால் யார் பொறுப்பு...வேட்பாளர்களை கேள்வி கேட்கும் நடிகை ஆர்த்தி

    |

    சென்னை : குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ஆர்த்தி, பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார்.

    டிவி நிகழ்ச்சிகள் பலவற்றில் கலந்து கொண்ட இவர், நடிகர் கணேஷ்வரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிக்பாஸ் சீசன் ஒன்றில் போட்டியாளராக கலந்து கொண்டு, பிரபலமானார். சமூக அக்கறை கொண்டவரான இவர் சமூக வலைதளங்களில் அவ்வப்போது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

    comedy actress harathi questions election campaign in corona virus second wave

    சிஏஏ போராட்டம் தீவிரமடைந்திருந்த போது, வெளிநாட்டவருக்கு குடிஉரிமை வழங்க வேண்டுமென போராட்டம், கலவரம் செய்யும் அப்பாவிகள் இந்தியாவில் வாழ்வதாக இவர் கூறிய கருத்துக்கள் பரபரப்பாக பேசப்பட்டன.

    comedy actress harathi questions election campaign in corona virus second wave

    இந்நிலையில் தற்போது தேர்தல் பிரசாரத்திற்கு கூட்டம் சேர்வதை குறிப்பிட்டு ஆர்த்தி ட்வீட் செய்துள்ளார். அதில், எதுக்கு மக்கள் கூட்டம் இந்த கொரோனா காலத்தில்? எல்லா அரசியல்வாதிகளும் ஆன்லைனில் பிரசாரம் செய்யலாமே? மக்கள் நலன்தானே முக்கியம்?

    comedy actress harathi questions election campaign in corona virus second wave

    பிரச்சார கூட்டத்திற்கு வருபவர்களுக்கோ கட்சிப் பணி ஆற்றுபவர்களுக்கோ கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் அந்த அந்த கட்சி அவர்களுக்கு பொருப்பேற்குமா? என கேள்வி கேட்டுள்ளார். ஆர்த்தியின் இந்த பதிவிற்கு ஆதரவுகள் குவிந்து வருகின்றன.

    English summary
    comedy actress harathi questions election campaign in corona virus second wave
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X