Actress Prema Priya: எல்லாத்துக்கும் வடிவேலு தான் காரணம்.. காமெடி நடிகை பிரேம பிரியா பேட்டி!

சென்னை: Actress Prema Priya ( நகைச்சுவை நடிகை பிரேம பிரியா பேட்டி) என் வளர்ச்சியை தடுத்தது வடிவேலு தான் என்று நகைச்சுவை நடிகை பிரேம பிரியா பேட்டியில் கூறியுள்ளார்.

தமிழில் திரைப்படங்களில் வடிவேலு, சந்தானம், சூரி ஆகியோருடன் இணைந்து நடித்து பிரபலமானவர் நடிகை பிரேம பிரியா.

தொட்டி ஜெயா என்ற படத்தில் வில்லியாக அறிமுகமான பிரேம பிரியா கொரோனாவால் கணவன், அப்பா, அக்கா என அனைத்து உறவுகளையும் இழந்து, தன்னந்தனியாக குடும்பத்திற்காக போராடி வருகிறார்.

Comedy Actress Prema Priya Emotional interview

பிரேமா பிரியா: பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்து பிரேம பிரியா, கொரோனாவால் முதலில் என் அக்காவை பறி கொடுத்தேன், அதன் பின் பத்தே நாளில் என் அப்பா காலமானார். இரண்டு மாதம் கழித்து என் கணவர் சர்க்கரை வியாதி முற்றி, உடல் உறுப்புகள் செயல் இழந்து காலமானார். அப்பாவின் மறைவுக்கு பின் என் கணவர் தான் எல்லாம் என்று நினைத்து இருந்தேன். அவர் போன பிறகு என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை.

சொல்லி அழுதேன்: சினிமாவில் பட வாய்ப்புகள் இல்லாததால் வேறு ஏதாவது வேலை செய்யலாம் என்று நான் சென்றபோதும் எனக்கு சரியான வேலைகள் கிடைக்கவில்லை அப்பொழுதும் ஒரு நடிகையாக தான் இந்த சமுதாயம் என்னை பார்த்தது. ஒரு நடிகைக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. மேலும் என் கஷ்டத்தை சொல்லி அழக்கூட ஆள் இல்லாததால் நான் பல மீடியாக்களில் சொல்லி அழுதேன்.

சந்தோஷமாக இருக்கிறேன்: ஆனால், இப்போது நான் நன்றாக இருக்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக பல கஷ்டங்களை சந்தித்துவிட்டேன். இப்போது நான் உண்மையில் சந்தோஷமாக இருக்கிறேன். பல படங்களில் நடித்து வருகிறேன். நான் கஷ்டப்பட்ட போது எனக்கு சூரி பண உதவி செய்தார். மற்ற நடிகர்களும் எனக்கு உதவி செய்தார்கள்.

வடிவேலு தான் காரணம்: வடிவேலுவுடன் பல திரைப்படங்களில் நடித்து இருக்கிறேன். ஆனால், என் வளர்ச்சியை தடுத்ததே வடிவேலுதான். பல வாய்ப்புகள் என்னை தேடி வந்தது. ஆனால், வடிவேலு இந்த பெண்ணு வேண்டாம் என்று சொல்லி விடுவார். இதனால், பல நல்ல படங்களின் வாய்ப்பு பறிபோனது. மேலும், வடிவேலு பற்றி நான் மீடியாவில் பேசியதால், ஒரு இயக்குநர் என்னை தொலைபேசியில் மறுப்பு தெரிவித்து வீடியோ வெளியிட சொன்னார். ஆனால் நான் முடியாது என்று சொல்லிவிட்டேன் என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X