என் பொழப்பை கெடுத்து.. சினிமா வாழ்க்கையை நாசமாக்கியது கவுண்டமணி தான்.. ஷர்மிலி வேதனை!

சென்னை: நடிகர் கவுண்டமணியால் என் சினிமா வாழ்க்கையே போச்சு என்று அவருடன் ஜோடி சேர்ந்து நடித்த நடிகை ஷர்மிலி தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் 90களில் நகைச்சுவை கலந்த குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ஷர்மிலி. இவர் தமிழ்,தெலுங்கு, மலையாளம் என ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் கவுண்டமணியுடன் மட்டும் சுமார் 27 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் இவர் தற்போது எங்கு இருக்கிறார் என்று தேடும் அளவுக்கு சினிமாவை விட்டுவிலகி உள்ளார்.

Comedy actress sharmili opens up about her cinema life

கர்ப்பமாக இருக்கிறேன்: நடிகை ஷர்மிலி யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் தற்போது நான் திருமண வாழ்க்கையை நிம்மதியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். என் கணவர் என்னை அன்பாக கவனித்துக்கொள்கிறோர். ஒரு காலத்தில் திருமணமே வேண்டாம் என்று இருந்தேன். ஆனால், 40வயதுக்கு மேல் நிச்சயம் ஒரு துணை தேவை என்பதை புரிந்து கொண்டு திருமணம் செய்து கொண்டேன் இப்போது நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்றார்.

மறுத்துவிட்டேன்: மேலும், க்ரூப் டான்ஸராக இருந்த நான், பொண்டாட்டி சொன்ன கேட்டுக்கணும், எங்கவீட்டு வேலன் போன்ற படங்களில் நடித்துக்கொண்டு இருந்தேன் அப்போதுதான் கவுண்டமணிக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று அழைப்பு வந்தது. எனக்கு காமெடி எல்லாம் வராது, அதுவும் இல்லாமல் அவர் வயசு என்ன, என் வயசு என்ன என்று மறுத்துவிட்டேன்.

Comedy actress sharmili opens up about her cinema life

படவாய்ப்பை இழந்தேன்: அதன் பிறகு கவுண்டணிக்கு ஜோடியாக கிட்டத்தட்ட 27 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறேன். நான் கவுண்டமணியுடன் நடித்ததால் தான் பிரபலமானேன் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அவருடன் சேர்ந்து நடித்ததால் பல நல்ல கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்தேன். அதே போல அவரும் பல பட வாய்ப்பை கெடுத்து இருக்கிறார்.

படவாய்ப்பை கெடுத்தார்: வீரா படத்தில் ரஜினியுடன் ஒரு பாடலுக்கு என்னை புக் செய்து இருந்தார்கள். ஆனால் கவுண்டமணி அதே தேதியில் தான் நான் டேட் கொடுத்து இருக்கிறேன் என்று சொல்லி நடிக்க முடியாமல் செய்துவிட்டார். இதனால், கவுண்டமணியிட கேட்டு ஷூட்டிங்கிற்கு தேதி புக் செய்யும் நிலைமையாகிவிட்டது. ஒரு கட்டத்தில் பத்திரிக்கையில் ஷர்மிலி கவுண்டமணியுடன் மட்டும் தான் நடிப்பார் என்று எழுத ஆரம்பித்து விட்டார்கள்.

Comedy actress sharmili opens up about her cinema life

வாழ்க்கையை நாசமாக்கினார்: இதனால், நான் கவுண்மணிக்கு ஜோடியாக நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டேன். நான் அப்படி சொல்லிவிட்டதால், டென்ஷனாக கவுண்டமணி புக்காகி இருந்த அனைத்து படத்திலிருந்து என்னை தூக்கி விட்டார். இதுபோன்று பல படத்தில் இருந்து என்னை நீக்கி என் பொழப்பை கெடுத்தது, வாழ்க்கையை நாசமாக்கியது கவுண்டமணி தான் என்று ஷர்மிலி பேட்டியில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X