சொல்றதை கேட்கலைன்னா ஆள மாத்திடுவேன்.. காமெடி நடிகைக்கு வடிவேலு போட்ட கண்டிஷன்.. சுமதி பளிச் பேட்டி!
சென்னை: படித்துறை பாண்டி உள்ளிட்ட பல காமெடி காட்சிகளில் வடிவேலுவுடன் இணைந்து நடித்து பிரபலமானவர் நடிகை சுமதி. சமீப காலமாக சினிமா வாய்ப்புகள் இல்லாமல் கஷ்டப்பட்டு வரும் அவர் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்று தீயாக பரவி வருகிறது.
தனது குழுவை வைத்துக் கொண்டு காமெடியில் உச்சம் தொட்டு பல கோடிகளை சம்பாதித்த வடிவேலு தனது டீமுக்கு கஷ்ட நேரத்தில் கொஞ்சம் கூட உதவவில்லை என்றும் வெளிப்படையாக பேசியுள்ளார் சுமதி.
வடிவேலு சொல்றதை கேட்கவில்லை என்றால் ஆளை மாத்திடுவேன் என மிரட்டுவார் என்றும் அந்த பேட்டியில் செம ஓபனாக பேசியுள்ளார்.

கேப்டனால் கிடைத்த வாழ்க்கை: நடிகை சுமதி சேலத்தில் இருந்து சாதாரண ஏழ்மை குடும்பத்தில் பிறந்து வளர்ந்து திருமணம் செய்துக் கொண்ட நிலையில், சினிமா மீது இருந்த ஆர்வம் காரணமாக தனது கணவருடன் சென்னைக்கு வந்து நடிக்க ஆரம்பித்தார். ஆரம்பத்தில் நடிகர் சங்கம் கார்டு கூட இல்லாமல் கூலி வேலைக்குச் செல்வது போல தினமும் காலை 5 மணி முதல் 9 மணி வரை யாராவது நடிக்க கூப்பிடுவாங்களா என கணவருடன் காத்துக் கொண்டிருந்தேன். கேப்டன் விஜயகாந்த் தான் கார்டு எல்லாம் கொண்டு வந்து நடிகர் சங்கத்தை வளர்த்து விட்டு இப்போ நான் வாழ்கிற வாழ்க்கைக்கு வெளிச்சம் கொடுத்தவர் என பேசியுள்ளார்.

வடிவேலு மிரட்டுவாரு: சினிமாவில் நான் நடித்த சில காட்சிகள் இன்னமும் மக்கள் மத்தியில் பிரபலம் ஆக காரணமே வடிவேலு சார் தான். ஒரு காட்சியில் அவரை எட்டி மிதிக்க வேண்டும். ஆனால், அந்த காட்சியில் பயந்துக் கொண்டு லேசாக கால் கூட படாதபடி நடித்தேன். உடனடியாக நல்லா மிதிக்கணும் சரியா, அப்போ தான் சீன் ரியலா இருக்கும். சொல் பேச்சை கேட்கலைன்னா ஆள மாத்திடுவேன் என மிரட்டுவார். ஆனால், அவருக்கு பட வாய்ப்புகள் போன நிலையில், எங்களையெல்லாம் கண்டுக் கொள்ளாமல் கழட்டி விட்டு விட்டார். அதற்காக அவர் மீது குறை ஏதும் சொல்ல விரும்பவில்லை. அவர் மீண்டும் நடிக்கும் படங்களில் மறக்காமல் சேர்த்து நடித்தால் சந்தோஷப்படுவேன் எனக் கூறியுள்ளார்.
எல்லாத்தையும் கடக்கணும்: சினிமாவில் நடிகையாக வலம் வருவது சும்மா கிடையாது. ஹீரோயின்கள் மட்டுமின்றி துணை நடிகைகள், காமெடி நடிகைகள் என நடிக்க வந்து விட்டாலே பல விஷயங்களை கடந்து வர வேண்டும் என மறைமுகமாக காஸ்டிங் கோச்சை பற்றியும் பேசி பகீர் கிளப்பி உள்ளார் சுமதி.


Click it and Unblock the Notifications











