For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பப்ளி வித்யுலேகா ராமன் எங்கேப்பா... இப்படி ஸ்லிம் ஆயிட்டாங்களேப்பா

|
Watch Video : Comedy actress vidyulleka raman Workout

சென்னை: பப்ளியாக இருந்த காமெடி நடிகை வித்யுலேகா ராமன் தன்னுடைய உடல் எடையை பெருமளவு குறைத்து தற்போது ஒரு கதாநாயகிக்கான தோற்றத்துடன் வலம் வருகிறார். எனவே வெகு விரைவில் ஒரு வித்தியாசமான கெட்டப்பில் நம் அபிமான வித்யுலேகா ராமனை திரையில் காணலாம்.

தென்னிந்திய திரையுலகில் நகைச்சுவை நடிகர்களின் பங்களிப்பு மிகவும் அபரிமிதமானது. பல நகைச்சுவை நடிகர்களை தமிழ் சினிமா வரலாற்றில் நாம் கண்டுள்ளோம். அதிலும் ஆண் நடிகர்களுக்கு சமமாக பெண் நகைச்சுவை நடிகர்கள் பலரும் தென்னிந்திய சினிமாவை ஒரு கலக்கு கலக்கியவர்களே.

Comedy Actress Vidyulleka Raman now looks like Heroin

டி.ஏ.மதுரம், மனோரமா, காந்திமதி, கோவை சரளா, ஆரத்தி மற்றும் மதுமிதா என பலர் தமிழ் சினிமாவில், நகைச்சுவையில் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்து அசத்தி இருக்கிறார்கள். அந்த வரிசையில் 2012ஆம் ஆண்டில் வெளியான நீதானே என் பொன்வசந்தம் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் வித்யுலேகா ராமன்.

அப்படத்தில் அவர் கதாநாயகி சமந்தாவின் தோழியாகவும் சந்தானத்தின் காதலியாகவும் காமெடியில் கலக்கினார். அந்த காமெடி காட்சிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. வித்யுலேகா ராமன் திரைப்படம் மற்றும் சின்னத்திரை நடிகரான மோகன் ராமனின் மகளாவார்.

திரையுலகில் நுழையும் போது அவரின் பப்ளிமாஸ் உடல்வாகு மற்றும் தோற்றத்தை வைத்தும் காமெடியில் பார்வையாளர்களை ரசிக்க வைத்தார். குறிப்பாக ஆர்யா- சந்தானம் மற்றும் தமன்னா நடித்த வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்தில் வித்யுலேகா ராமனின் காமெடி அட்டகாசங்கள் சரவெடி.

தமிழ் திரைப்படங்கள் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் வித்யுலேகா ராமன் மிகவும் பிரபலம். இப்படி அவரின் உடல்வாகுவை பிளஸ் பாயிண்ட்டாக வைத்து நகைச்சுவையில் ஈடுபடுவதை விட ஒரு தைரியமான நடவடிக்கை மூலம் அவரது அபிமானிகளுக்கு அதிர்ச்சி அளிக்க தயாராகி வருகிறார்.

அவரது உடல் எடையை கடுமையான உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடுகள் மூலம் குறைத்து வருகிறார். கடைசியாக ஜூன் மாதத்தில் அவரது எடை 71.5 கிலோவாக பதிவாகியுள்ளது. இதுவரையில் அவர் 14கிலோ வரை எடை குறைந்துள்ளார். அவரது உணவு பழக்க வழக்கங்களையும் அவர் வெகுவாக மாற்றியுள்ளார்.

En Kadhali Scene Podura Review: ஒரு கொலை.. ஒரு விரோதி.. இதுக்கு இடைல சீன் போடுற ஒரு காதலி!

இப்போது அவருடைய உடல்வாகு ஒரு கதாநாயகிக்கு ஏற்றாற்போல் மாறியுள்ளதை பார்த்தால் ஆச்சர்யமாக உள்ளது. இருப்பினும் முரண்பாடாக திரையுலகில் சுனில், மாஸ்டர் பாரத், ஷாமிலி என பலரும் தங்களது உடல் எடையை குறைத்த பிறகு வாய்ப்புகள் மிகவும் குறைந்து போனது. எனவே வித்யுலேகா ராமன் தனது எடையை குறைத்த பிறகு திரையுலகில் வெற்றிகரமாக மாறினால் அது ஒரு பெரிய சாதனையாகும்.

இந்நிலையில் வித்யுலேகா ராமனுக்கு தமிழில் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என பல வதந்திகள் பரவி வந்த நிலையில் அவருக்கு பல வாய்ப்புகளை தெலுங்கு தயாரிப்பாளர்கள் வழங்கி வருகிறார்கள் என்றும் தெளிவுபடுத்தினார்.

மேலும் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான நின்னு கோரி திரைப்படத்தின் தமிழ் ரீமேக் படத்தில் அதர்வா, அனுபமா அதே கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார்கள். இதில் வித்யுலேகா ராமனும் நடிக்கவுள்ளார். எனவே வெகு விரைவில் ஒரு வித்யாசமான கெட்டப்பில் நம் அபிமான வித்யுலேகா ராமனை திரையில் காணலாம். ஆல் தி பெஸ்ட் விது.

English summary
Comedy actress Vidyulleka Raman has reduced her body weight and is currently looking for a heroine. So very soon we can find our favorite Vidyulleka Raman on screen in a different getup.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more