ஆர்யா-சாயிஷா திருமணத்தில் நடந்த செம காமெடி.. இப்டி அசிங்கப்படுத்திட்டாங்களேப்பா!

நடிகர் ஆர்யா திருமணத்தில் நடந்த காமெடி வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஹைதராபாத்: நடிகர் ஆர்யா-சாயிஷா திருமணத்தில் நடந்த காமெடி ஒன்று தற்போது தெரிய வந்துள்ளது.

நடிகர் ஆர்யா - சாயிஷா திருமணம் கடந்தவாரம் ஹைதராபாத்தில் வைத்து நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இத்திருமணத்தில் கலந்து கொண்டனர்.

Comedy in Arya and Sayyeshaa wedding

திருமணம் மற்றும் அதற்கு முந்தைய மெஹந்தி, சங்கீத் உள்ளிட்ட கொண்டாட்டங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஆர்யா மற்றும் சாயிஷா தங்களது சமூகவலைதளப் பக்கங்களில் வெளியிட்டனர். அதனை அவர்களது ரசிகர்கள் வைரலாக்கினர்.

அதில் ஒரு புகைப்படத்தில் மூன்று அடுக்காகச் செய்யப்பட்ட கேக் ஒன்றை ஆர்யாவும், சாயிஷாவும் வெட்டுவது போன்று இருந்தது.

இந்நிலையில், அந்த கேக் வெட்டும் நிகழ்ச்சியின் போது நடைபெற்ற காமெடி சம்பவம் ஒன்று தற்போது வெளியில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்றை ரசிகர் ஒருவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், ஆர்யாவும், சாயிஷாவும் கேக்கை வெட்டும் போது அருகில் இருக்கும் சிலர், 'ஹேப்பி பர்த்டே டூ யூ' எனப் பாடல் பாடுகின்றனர். அவர்கள் வேண்டுமென்றே அப்படிப் பாடினார்களா இல்லை பழக்க தோஷத்தில் கேக்கைப் பார்த்ததும் ஹேப்பி பர்த்டே பாடினார்களா என்பது தெரியவில்லை.

ஆனால், இந்த சம்பவத்தால் ஆர்யா-சயிஷாவே சிரிக்க ஆரம்பித்துவிட்டனர். சுற்றி இருந்தவர்களும் விழுந்து விழுந்து சிரித்துள்ளனர். இதனால் திருமண வீடு மேலும் கலகலப்பானது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X