மனைவி மரணம்.. தனிமரமான கவுண்டமணி.. ஆறுதல் கூற முடியாமல் திணறிய சத்யராஜ்!
சென்னை: நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 67. இவரது மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த செய்தியை கேள்விப்பட்ட திரைப்பிரபலங்கள் பலர், கவுண்டமணியின் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறி வருகின்றனர்.
நக்கல் நையாண்டிக்கு பெயர் பெற்ற நடிகர் கவுண்டமணி, 1939ம் ஆண்டு பொள்ளாச்சியில் உள்ள வல்லகொண்டபுரம் எனும் ஊரில் பிறந்தார். 1970 ஆம் ஆண்டு வெளியான 'ராமன் எந்தன் ராமனடி' படத்தின் கூட்டத்தொடு கூட்டமாக இருந்த கவுண்டணி, பின் நாளில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடி நகராக மாறினார். 16 வயதிலே படத்தில் 'பத்த வச்சிட்டியே பரட்டை' என்ற வசனத்தை மட்டும் பேசி அனைவராலும் பேசப்பட்டார். அந்த படத்தை தொடர்ந்து தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக வலம் வந்த கவுண்டமணியின் வசனங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
நடிகர் கவுண்டமணி: செந்தில், கவுண்டமணி காமினேஷனில் ஒரு சில படங்கள் ஒர்க்கவுட்டாகி போக, காமெடி என்றால் அது செந்தில், கவுண்டமணி தான் என்ற நிலை உருவானது. இருவரும் சேர்ந்து படத்தில் ஒரு காட்சியில் வந்தாலே படம் வெற்றி பெற்று விடும் என்று தயாரிப்பாளர்கள் நம்பியதால், இவர்களின் காமினேஷனில் பல திரைப்படங்கள் வெளியானது. குறிப்பாக கரகாட்டக்காரன் திரைப்படத்தில் இவர்கள் இருவரும் சேர்ந்து செய்த அலப்பறைக்கு அளவே இருக்காது. வாழைப்பழ காமெடி, சொப்பன சுந்தரி காமெடி, இன்றைய இளசுகளுக்கும் பிடித்தமான, எவர்கிரீன் நகைச்சுவை காட்சியாகவே உள்ளது.

ஒத்த செருப்பு முந்தையா: வயது மூப்பு காரணமாக சினிமாவில் தலை காட்டாமல் இருந்த கவுண்டமணியின் நடிப்பில் அண்மையில் ஒத்த செருப்பு முத்தையா என்ற படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. தனது தள்ளாத வயதிலும் அந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அதே குசுப்புடன் பேசினார். 70 முதல் தற்போது வரை சுமார் 950 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் கவுண்டமணி 12 படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். அதேபோல, ரஜினி, கமல், சத்யராஜ், சரத்குமார், பிரபு என அனைத்து முன்னணி நடிகர்களின் படத்திலும் நடித்துள்ளார்.
நடிகர் கவுண்டமணி திரைப்படத்தில் எப்படி காதலர்களை சேர்த்து வைப்பாரோ அதே போல நிஜ வாழ்க்கையிலும் சாந்தி என்ற பெண்ணை காதலித்து அவரையே திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு செல்வி, சுமித்ரா என இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதியுற்று வந்த கவுண்டமணியின் மனைவி சாந்தி இன்று காலை 10.30 மணி அளவில் உயிரிழந்தார். அவரின் உடல் தேனாம்பேட்டையில் உள்ள கவுண்டமணியின் வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை கேள்விப்பட்ட நடிகர் சத்யராஜ், முதல் ஆளாக கவுண்டமணியின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறியுள்ளார். காதல் மனைவியை இழந்த சோகத்தில் சோக முகத்துடன், கண்களில் வலி, மன வேதனையுடன் நின்று இருந்த கவுண்டமணிக்கு எப்படி ஆறுதல் கூறுவது என்றே தெரியாமல் தவித்து நின்றார் சத்யராஜ். மேலும், பல திரைப்பிரபலங்கள் இணையத்தின் வழியாக இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











