வடிவேலு என்னை மிரட்டி எழுதி வாங்கினாரு..ரூம்ல 7 பேர் என்னை அடிச்சாங்க.. காதல் சுகுமார் பேட்டி!
சென்னை: என்னை மாதிரி நடிக்கிறீயா என்று கேட்டு வடிவேலு என்னை ஆள வச்சி அடிச்சார் என்று வடிவேலுவின் மோசமான குணம் பற்றி காதல் சுகுமார் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
காதல் சுகுமாரை நடிகர் வடிவேல் தாக்கியிருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உள்ள நகைச்சுவை நடிகர்களில் சுகுமாரும் ஒருவர். இவர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளியான காதல் படத்தில் நகைச்சுவை நடிகராக நடித்து இருந்தார். மேலும், இந்த படத்தில் பரத், சந்தியா நடித்து இருந்தார்கள். இந்த படத்தின் மூலம் நடிகர் சுகுமார் மக்களிடையே பிரபலமானார்.

நடிகராக அறிமுகமான காதல் சுகுமார், திருட்டு விசிடி என்ற படத்தை இயக்கி இருந்தார். பின் 2016 ஆம் ஆண்டு சும்மா ஆடுவோம் என்று கூத்து கலைஞர்களின் வாழ்க்கையை படமாக இயக்கி கூத்து இருந்தாலும் இவரின் படங்கள் பெரிதாக மக்கள் மத்தியில் பிரபலமாகவில்லை. தற்போது வாய்ப்பு தேடி அலைந்து வருகிறார்.
டூப்பாக நடிக்க மறுத்தேன்: அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள காதல் சுகுமார், வடிவேலுவின் மோசமான குணம் குறித்து பேசி உள்ளார். அதில், 2000ம் ஆண்டு நான் சினிமாவிற்கு வந்த போது வடிவேலு ரொம்ப பீக்கில் இருந்தார். பல மேடை நிகழ்ச்சிகளில் அவரைப்போலவே செய்து இருக்கிறேன். இதனால், பல கம்பெனிகளில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அப்போது கலகலப்பு என்ற படத்தில் நான் வடிவேலு போலவே நடித்தேன். அந்த நேரத்தில், மானஸ்தான் படப்பிடிப்பின் போது வடிவேலுவிற்கு காலில் அடிப்பட்டுவிட்டதால் அவரால் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாமல் போனதால், அவருக்கு டூப்பாக நடிக்க என்னை அழைத்தார்கள். ஆனால், நான் அப்படி நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டேன். இந்த தகவல் மருத்துவமனையில் இருக்கும் வடிவேலுவின் காதுக்கு சென்றது.
7 பேர் என்னை அடித்தனர்: அப்போது முத்துக்காளை மற்றும் போண்டா மணி இருவரும், வடிவேலு உங்களை பார்க்க வேண்டும் என்று அழைத்து சென்றார்கள். நானும் அவரை பார்ப்பதற்காக ஆசையாக சென்றேன். ஆரம்பத்தில் நன்றாக பேசிக் கொண்டிருந்த வடிவேலு, முத்துக்காளை மற்றும் போண்டா மணியை வெளியில் அனுப்பிவிட்டு ரூமில் என்னிடம் பேசினார். அப்போது, வடிவேலு என்னை மாதிரியே நடிப்பேனு சொல்லி, எல்லா கம்பெனியிலும் சான்ஸ் கேட்குறியாமே என்று சொல்ல அருகில் இருந்து சிங்கமுத்து மற்றும் உடன் இருந்த 7 பேர் என்னை திடீரென அடித்தனர். நான் சுதாரிப்பதற்குள் அனைவரும் சரமாரியாக அடித்துவிட்டனர்.
மிரட்டி எழுதி வாங்கினார்: சட்டை பட்டன் எல்லாம் அறுத்து என்னை செய்வது என்று தெரியாமல் அழுது கெஞ்சி நான் ஊருக்கே போய்விடுகிறேன் என்றேன். இவனை இப்படியே வெளியில் விட்டால், பத்திரிக்கையில் எதையாவது சொல்லிவிடுவான் என நினைத்துக்கொண்டு என்னிடம் எழுதிவாங்கினார்கள். அதாவது என் தங்கையின் படிப்பு செலவுக்காக உதவி கேட்டு வடிவேலு அண்ணானை பார்க்க வந்தேன் அவர் எனக்கு பத்து ஆயிரம் ரூபாய் கொடுத்தாரு என்று எழுதி வாங்கிக் கொண்டார்கள். அந்த கடிதம் இன்னமும் வடிவேலுவிடம் இருக்கு. வெளியில் இருந்த போண்டா மணி,முத்துக்காளை இருவரும் என்னைப்பார்த்துவிட்டு மன்னித்துவிடு என்று கண்கலங்கினார்கள் என்று அந்த பேட்டியில் காதல் சுகுமார் தனது வேதனையை வெளிப்படுத்திஉள்ளார்.


Click it and Unblock the Notifications











