உயிருக்கு போராடும் பிரபல வில்லன் நடிகர்.. தீவிர சிகிச்சையில் டாக்டர்கள்.. திரையுலகம் அதிர்ச்சி!
ஐதராபாத்: பிரபல வில்லன் நடிகர் உடல் நலக்குறைவு காரணமாக, திடீரென சுயநினைவை இழந்துள்ளார்.
பிரபல தெலுங்கு நடிகர், நர்சிங் யாதவ். தமிழ், தெலுங்கு, இந்தி என சுமார் 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
பெரும்பாலும் காமெடி வில்லன் வேடங்களில் நடிக்கும் இவர், ராம்கோபால் வர்மா இயக்கும் அனைத்து படங்களிலும் நடித்திருக்கிறார்.

ரஜினியின் பாட்ஷா
தமிழில், ஹரி இயக்கத்தில் விஷால், ஸ்ருதிஹாசன் நடித்த பூஜை, சுசீந்திரன் இயக்கத்தில் விக்ரம் நடித்த ராஜபாட்டை, சக்தி, ரம்யா நம்பீசன் நடித்த ஆட்டநாயகன், பிரபுசாலமன் இயக்கத்தில் சார்மி நடித்த லாடம், விஜய், த்ரிஷா நடித்த குருவி, ரஜினியின் சூப்பர் ஹிட் படமான, பாட்ஷா ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

சிறுநீரகப் பிரச்னை
இந்தியிலும் சில படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில், கைதி நம்பர் 150, அட்டாக், ரேஸ் குர்ரம், சங்கர் தாதா எம்.பி.பி.எஸ், போக்கிரி, நுவ்வொஸ்தானன்டே நேனொட்டன்னா உட்பட பல படங்களில் நடித்துள்ள இவர், கடந்த சில மாதங்களாக, உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். சிறுநீரகப் பிரச்னை என்று கூறப்படுகிறது.

சுயநினைவை இழந்தார்
இதன் காரணமாக, சிகிச்சை பெற்றுவந்த அவர், இன்று அதிகாலை திடீரென சுயநினைவை இழந்தார். இதையடுத்து சோமாஜிகுடா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டு அவர் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாக அவர் மனைவி சித்ரா தெரிவித்துள்ளார்.

பிரார்த்தனை
அவர் விரைவில் குணமடைய, ரசிகர்கள் பிரார்த்திக்க வேண்டும் என்றும் சித்ரா கேட்டுக் கொண்டுள்ளார். வீட்டில் தடுமாறி கீழே விழுந்ததாகவும் அதனால் அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சுயநினைவை இழந்ததாகவும் வந்த செய்திகளை சித்ரா மறுத்துள்ளார். நடிகர் நர்சிங், மருத்துவமனையில் கோமா நிலையில் இருப்பது தெலுங்கு திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











