தளபதி 67ல் நடிக்கிறீங்களா?..யோகிபாபு சொன்ன முக்கியத்தகவல்!
சென்னை : தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக யோகிபாபு பேட்டியில் கூறியுள்ளார்.
விஜய்யின் வாரிசு படத்துக்குப் பிறகு தளபதி விஜய், லோகேஷ் கனகராஜூடன் மீண்டும் கூட்டணி அமைக்க இருக்கிறார். இந்தப் படத்துக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அதற்கான பணிகளில் மும்முரமாக கவனம் செலுத்தி வருகிறார்.
சில பேட்டிகளில் கூட, தயாரிப்பு நிறுவனம் கூறும் வரை பொறுமையாக இருக்க வேண்டும் என கூறினாரே தவிர, படம் குறித்து எந்தவிதமான தகவலையும் சொல்லவில்லை.

வாரிசு
நடிகர் விஜய் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் வாரிசு படத்தின் சூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார். ராஷ்மிகா மந்தனா, சரத்குமார் மற்றும் பிரகாஷ் ராஜ், சங்கீதா, ஜெயசுதா, யோகிபாகி, ஷாம், பிரபு என ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் இத்திரைப்படத்தில் நடித்து வருகின்றனர்.

விறுவிறுப்பான சூட்டிங்
இந்தப் படத்தில் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பெரும்பாலான படப்பிடிப்பு பணிகள் முடிந்து விட்டது. அண்மையில் விசாகப்பட்டனத்தில் ஹார்பரில் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், அதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் லீக்கானது. மேலும், மருத்துவமனை காட்சி ஒன்றும் இணையத்தில் வெளியானது. இதனால், வாரிசுபடக்குழு படப்பிடிப்பு த தளத்தில் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

தளபதி 67ல் நடிக்கிறீங்களா?
இந்நிலையில், வாரிசு திரைப்படத்தில் நடித்து வரும் யோகிபாபுவிடம், வாரிசு திரைப்படத்தின் அப்டேட் செல்லுங்க என்று செய்தியாளர்கள் கேட்டனர். உடனே யோகிபாபு வாரிசு திரைப்படத்தில் விஜய் நடிக்கிறார் என்று கிண்டலாக பதிலளித்தார். இதையடுத்து, தளபதி 67 திரைப்படத்தில் நடிக்கிறீங்களா? என்று கேட்டனர். இதறகு பதிலளித்த யோகிபாபு, லோகேஷ் கனகராஜ் பேசி இருக்கிறார், கண்டிப்பா பண்ணலாம் என்று சொல்லி இருக்கிறார் என கூறியுள்ளார்.

விஜய்யுடன் பல படங்களில்
நடிகர் யோகிபாபு விஜயுடன் வேலாயுதம்,மெர்சல், சர்க்கார், பிகில், பீஸ்ட் என தொடர்ந்து விஜய்யின் படத்தில் நடித்து உள்ளார். அதுமட்டும் இல்லாமல் தமிழ், தெலுங்கு என இருமொழியில் உருவாகி வரும் வாரிசு படத்திலும் நடித்துவரும் யோகிபாபு அடுத்து உருவாக உள்ள தளபதி 67 படத்திலும் நடிப்பது உறுதியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











