யோகி பாபுவின் புது அவதாரம்.. "டகால்ட்டி" தயாரிப்பாளரின் புது முயற்சி !

சென்னை : தமிழ் சினிமாவின் காமெடி கிங் யோகி பாபு, திரைத்துறையில் தனது அடுத்த கட்ட பயணத்தை தொடங்கி உள்ளார்.

Recommended Video

Mandram Vandha (Mouna Ragam) in English |Lock Down | Quarantine

நயன்தாராவும் யோகிபாபுவும் இணைந்து நடித்த படம் கோலமாவு கோகிலா படம் பெரும் அளவு பேசப்பட்டது . இதையடுத்து, மீண்டும் நயன்தாராவுடன் யோகிபாபுவை சேர்த்து வைக்க டகால்ட்டி பட தயாரிப்பாளர் ஒரு புது முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

Comedy Yogi Babus next plan

மேலும், இப்படத்தில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் பெயர் வைக்கப்படாத இந்த படத்திற்கு, கதை, திரைக்கதை, வசனம் எழுதப்போவது யோகிபாபு தான். இது வரை நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த யோகி, இந்த படம் மூலம் புது முயற்சியை கையில் எடுத்து களத்தில் இறங்கப்போகிறார்.

இந்த புது முயற்சியை சில இயக்குனர்கள் பாராட்டுகின்றனர், ஆனால் சிலர் இது இவருக்கு எதுக்கு இந்த தேவை இல்லாத வேலை என்றும் கிண்டல் செய்தும் வருகின்றனர். ஆனால், பல பிரபல காமெடியன்கள் சொந்தமாகவே திரைக்கதை ,வசனம் எழுதி படத்தில் நடித்து அப்படம் பெரும் அளவில் பேசப்பட்டுள்ளதை நாம் மறுக்கமுடியாது. அந்த வகையில் யோகியும் இதில் களமிறங்கியது பாராட்டுக்குரியது.

Comedy Yogi Babus next plan

18 ரீல்ஸ் எஸ்.பி. சவுத்தரி புது புது முயற்சியில் ஈடுபடுவது நாம் அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் இப்பொது எடுத்திருக்கும் இந்த புது முயற்சியை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இப்படத்தில் யோகிபாபு , கதை, திரைக்கதை, வசனம் மட்டுமே எழுதுகிறார் என்றும் இயக்கவில்லை என்றும் மீடியா வட்டாரங்கள் தெரிவிக்கின்றது .18 ரீல்ஸ் எஸ்.பி .சவுத்தரி தயாரிப்பாளர் மட்டும் இன்றி குழந்தை மருத்துவர் என்பதால் கொரோனா சம்மந்தப்பட்ட பல விழிப்புணர்வு வாக்கியங்களையும், கருத்துக்களையும் சினிமா நண்பர்களுடனும், பொதுமக்களுடனும் பகிர்ந்து வருகிறார்.

எஸ்.பி .சவுத்தரி தயாரித்து வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய திரைப்படம் தான் "டகால்ட்டி" சந்தானம் ஹீரோவாக நடித்த இப்படம் பெரும் அளவில் பேசப்பட்டது . இப்படம் நாளை தமிழ் புத்தாண்டன்று மதியம் 3:30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்புகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

யோகியை வைத்து இவர்கள் தயாரிக்கும் படத்திற்கான படப்பிடிப்பு நாட்கள் ஊரடங்கு உத்தரவு விலக்கப்பட்ட பின் மறுபரிசீலனை செய்யப்போவதாகவும் அந்த தேதியில் நயன்தாரா கால் ஷீட் கொடுத்தால் அவர் நடிப்பார் என்றும், இல்லை என்றால் அடுத்த கட்டமாக காஜல் அகர்வாலிடம் பேசப்போவதாக பல செய்திகள் வெளிவருகின்றன.

யோகிபாபு , நயன்தாரா மற்றும் யோகிபாபு , காஜல் காம்பினேஷன்களில் வைத்து பல போஸ்டர் டிசைன் வேலைகளும் செய்து வருகின்றனர். காமெடி மன்னன் யோகியுடன் நடிக்கப்போகும் யார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X