twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சென்னையில் 15 இடங்களில் வருது அம்மா ஏ.சி தியேட்டர்கள்: ரூ.25க்கு டிக்கெட்

    By Mayura Akilan
    |

    சென்னை: சென்னையில் முதற்கட்டமாக 15 இடங்களில் அம்மா தியேட்டர்கள் கட்ட இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அங்கு குளு குளு வசதியுடன் தியேட்டர்கள் கட்டப்பட உள்ளன. அம்மா தியேட்டர்களில் ரூ.25 க்கு டிக்கெட் விற்பனை செய்யப் பட உள்ளது.

    சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் காலியாக உள்ள இடங்களில் 'அம்மா திரையரங்கம்' அமைக்கப்படும் என்று மாநகராட்சி பட்ஜெட்டில் மேயர் சைதை துரைசாமி அறிவித்தார்.

    பயன்பாடு இல்லாத மாநகராட்சிக்கு சொந்தமான பழைய கட்டிடங்கள், சமுதாய கூடங்கள் மற்றும் காலி இடங்களில் இந்த திரையரங்குகள் அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

    கண்ணைக் கட்டும் கட்டணங்கள்

    கண்ணைக் கட்டும் கட்டணங்கள்

    பெரும்பாலான தியேட்டர்கள் வணிக, வளாகங்களாக மாற்றப்பட்ட நிலையில் திரைப்பட கட்டணம் அதிகளவு உயர்ந்துள்ளது.

    அம்மா தியேட்டர்

    அம்மா தியேட்டர்

    சாமானிய மக்களின் பொழுது போக்கு அம்சத்தை நிறைவேற்றும் வகையில் குறைந்த கட்டணத்தில் ‘அம்மா திரையரங்கம்' அமைப்பதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

    15 தியேட்டர்கள்

    15 தியேட்டர்கள்

    மண்டலத்திற்கு ஒன்று வீதம் 15 மண்டலங்களில் 15 அம்மா தியேட்டர்கள் முதல் கட்டமாக தொடங்கப்படுகிறது. நுங்கம்பாக்கம், ராயபுரம், மிண்ட், அண்ணா நகர், துறைமுகம், மதுரவாயல், பெருங்குடி ஆகிய பகுதிகளில் அம்மா தியேட்டர் அமைப்பதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.

    டிசம்பர் இறுதிக்குள் தியேட்டர்

    டிசம்பர் இறுதிக்குள் தியேட்டர்

    இடங்கள் தேர்வு செய்து தியேட்டர் அமைப்பதற்கான டெண்டர் விரைவில் விடப்படுகிறது. டிசம்பர் மாதம் இறுதிக்குள் அம்மா தியேட்டர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    குளு குளு வசதியில்

    குளு குளு வசதியில்

    இந்த தியேட்டர்களில் யு சான்றிதழ் தமிழ் திரைப்படங்கள் மட்டுமே ஒளிபரப்பப்படும். மேலும் தியேட்டர்களில் குளு குளு வசதியும் செய்யப்படுகிறது. புதிய திரைப்படங்களை பார்க்கும் வகையில் நவீன ஒலி பெருக்கி சாதனங்கள் அமைக்கப்படுகின்றன.

    டிக்கெட் விலை ரூ.25

    டிக்கெட் விலை ரூ.25

    பொது மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் பொழுது போக்கு வசதியை ஏற்படுத்தி கொடுக்க மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது. திரைப்பட கட்டணமாக ரூ.25-க்கும் குறைவாக நிர்ணயிக்கப்படுகிறது என்று மாநகராட்சி அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

    அம்மா மயம்

    அம்மா மயம்

    அம்மா கேன்டீனில் சாப்பிட்டு விட்டு அம்மா குடிநீர் பாட்டிலுடன் இனி அம்மா திரையரங்கில் சென்னை வாசிகள் ஜாலியாக திரைப்படம் பார்க்கலாம்.

    English summary
    By this year end, you may find yourself walking into one of the now unused buildings in the city's neighbourhood to watch a movie. Chennai corporation officials have identified land and buildings in several neighbourhoods to set up air-conditioned Amma theatres which will offer tickets at less than Rs 25.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X