தூத்துக்குடியில் போலீஸ்காரரை எப்படி தாக்கியிருக்கிறார்கள் பாருங்க: வீடியோ வெளியிட்ட காயத்ரி

By Siva

Recommended Video

தூத்துக்குடியில் போலீசை தாக்கிய பொதுமக்களின் வீடியோ வெளியிட்ட பிக் பாஸ் காயத்ரி!

சென்னை: பொதுமக்கள் சேர்ந்து போலீஸ்காரர் ஒருவரை அடித்து நொறுக்கிய வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் காயத்ரி ரகுராம்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி போராட்டம் நடத்திய மக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். மேலும் இரவு நேரத்தில் வீட்டுக்குள் புகுந்து மக்களை வெளியே இழுத்து வந்து அடித்துள்ளனர்.

போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர்.

காயத்ரி

தூத்துக்குடியில் பொதுமக்கள் சேர்ந்து போலீஸ்காரரை தாக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார் காயத்ரி ரகுராம். இது மக்களுக்கும், போலீசாருக்கும் இடையேயான போர் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

காயம்

நாம் அனைவரும் போலீசார் மக்களை காயப்படுத்தியது, சுட்டது ஆகியவற்றை தான் பார்த்தோம். போலீசாருக்கு என்ன நடந்தது என்பதை பார்க்கவில்லை. அதனால் தான் இந்த வீடியோவை வெளியிட்டேன். நான் யார் பக்கமும் இல்லை. மக்களும், போலீசாரும் பாதிக்கப்பட்டடுள்ளனர். நாம் அனைவரும் தமிழர்கள். நமக்கு குடும்பம் இருக்கிறது என்கிறார் காயத்ரி.

பதில் சொல்ல வேண்டும்

துப்பாக்கிச்சூடு நடத்த யார் உத்தரவிட்டது என்பது குறித்து அரசு பதில் அளிக்க வேண்டும். அமைதி போராட்டம் எப்படி கலவரமானது? அரசு பதில் அளிக்க வேண்டும். தமிழக மக்களுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று காயத்ரி ட்வீட்டியுள்ளார்.

காயம்

தூத்துக்குடியில் எந்த போலீஸ்காரரும் பலியாகவில்லை. அப்பாவி மக்கள் தான் பலியாகியுள்ளனர். உங்களிடம் பேசி பயனில்லை என்று காயத்ரி ரகுராமுக்கு நெட்டிசன்கள் பதில் அளித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X