பரமபதம் விளையாட்டு விளம்பரத்திற்கு வர த்ரிஷா மறுப்பு.. தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் !
சென்னை : த்ரிஷா நடித்துள்ள பரமபதம் விளையாட்டு ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள நிலையில்,படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்கு த்ரிஷா வர மறுத்ததால் அவர் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தியும் எதையும் த்ரிஷா ஏற்றுக்கொள்ளாமல் தொடர்ந்து பிடிவாதமாக இருந்து உள்ளார்.
இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் தமிழ் புத்தாண்ட அன்று வெளியாக உள்ளது.

பேட்டயில் ரஜினியுடன்
த்ரிஷா, விஜய், அஜித், விக்ரம், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இதையடுத்து தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்துள்ளார். இவர், தமிழில் கடைசியாக பேட்ட திரைப்படத்தில் நடித்திருந்தார். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்த இந்தப்படத்தில் அவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன் பின் இவர் நடித்த எந்த திரைப்படமும் வெளியாகவில்லை.

பொன்னியின் செல்வன் லீட் ரோலில்
நடிகை த்ரிஷா மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன், சுந்தர் பாலுவின் கர்ஜனை, எச் வினோத்தின் சத்துரங்க வேட்டை 2 படத்தில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும், எம் சரவணனின் ராங்கி மற்றும் சுமந்த் ராதாகிருஷ்ணனின் சர்க்கரை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில்
த்ரிஷாவின் 60வது திரைப்படமான பரமபதம் விளையாட்டு டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் தமிழ் புத்தாண்டு அன்று வெளியாக உள்ளது. இப்படத்தை திருஞானம் இயக்கி உள்ளார். க்ரைம் த்ரில்லர் திரைப்படமான இப்படத்தில் த்ரிஷா மருத்துவராக நடித்துள்ளார். இப்படத்தில், நந்தா, வேல ராமமூர்த்தி, தயாரிப்பாளர் ஏ. எல். அழகப்பன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தயாரிப்பாளர் சங்கம் முடிவு
கடந்து ஆண்டே வெளியாக வேண்டிய இப்படத்தை 24 ஹவர்ஸ் தயாரிப்பு நிறுவனம் ஒடிடியில் தற்போது வெளியிடமுடிவு செய்தது. ஆனால், நடிகை த்ரிஷா படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் நடிக்க மறுத்து உள்ளார். இதனால், கடும் அதிருப்தி அடைந்த தயாரிப்பு நிறுவனம், த்ரிஷா நடிக்கும் படங்களுக்கு ஒத்துழைப்பு வழங்காமல் அவரின் படங்களுக்கு தடை விதிக்கும் ஆலோசனையில் தயாரிப்பாளர் சங்கம் உள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











