ஆபாசமாகப் பேசி கொலை மிரட்டல் விடுக்கிறார்... மறைந்த நடிகர் ரித்தீஷின் மனைவி மீது போலீசில் புகார்!

மறைந்த நடிகர் ரித்தீஷின் மனைவி மீது போலீசில் கொலை மிரட்டல் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

46 வயதிலேயே மரணம்...3 குழந்தைகளுடன் தனியாக நிற்கும் JK ரித்தீஷ் மனைவி

சென்னை : மறைந்த நடிகர் ரித்தீஷின் மனைவி ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுப்பதாக கேசவன் என்பவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

நாயகன், எல்.கே.ஜி உள்ளிட்ட படங்களில் நடித்தவரும், அரசியல்வாதியுமான ஜேகே ரித்தீஷ் கடந்த மாதம் தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்ற போது மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது திடீர் மரணம் திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

Complaint against actor Rithesh wife

ரித்தீஷுக்கு ஜோதீஸ்வரி என்ற மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில், ஜோதீஸ்வரி மீது ரித்தீஷின் உதவியாளராக இருந்த கேசவன் என்பவர் சென்னை பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில் அவர், 'கடந்த 10 ஆண்டுகளாக ஜேகே ரித்தீஷிடம் பணியாற்றி வருகிறேன். அவருக்கு சொந்தமான வீட்டில், தன்னையும், தனது குடும்பத்தினரையும் தங்கிக் கொள்ளுமாறு கூறிவிட்டார். இதற்காக அவரிடம் நான் பணி செய்வதற்கான ரூ.4 லட்சம் பணத்தை நான் பெறவில்லை.

அப்படியிருக்கும் போது, அவருடைய மனைவி ஜோதீஸ்வரி வீட்டை காலி செய்யுமாறு வற்புறுத்துகிறார். அடியாட்களைக் கொண்டு மிரட்டுகிறார். மேலும், தனக்கு வர வேண்டிய ரூ.4 லட்சம் பணத்தையும் தர மறுக்கிறார். அடியாட்களைக் கொண்டு மிரட்டுகிறார். இவரைப் போன்று தயாரிப்பாளரான ஐசரி கணேஷூம், ஜோதீஸ்வரியிடம் வீட்டை கொடுத்துவிட்டு வெளியேறுமாறு தொலைபேசியில் மிரட்டுகிறார் என்று கூறியுள்ளார்.

கேசவன் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் ரித்தீஷின் மனைவி ஜோதீஸ்வரியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரித்தீஷ் இறந்து ஒரு மாதமே ஆன நிலையில் அவரது மனைவி மீது போலீசில் கொலை மிரட்டல் புகார் அளிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X