நடிகர் சத்யராஜின் தங்கை மீது கணவர் போலீஸில் புகார்
குன்னூர்: போலி கையெழுத்து மூலம் தனது காரை அபகரித்து விட்டதாக நடிகர் சத்யராஜின் தங்கை மீது அவரது கணவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
நடிகர் சத்யராஜின் தங்கை கல்பனா நீலகிரி மாவட்டம், குன்னூரில் வசித்து வருகிறார். இவரது கணவர் அர்ஜூன் மன்றாடியார். இருவரும் பிரிந்து வசித்து வருகின்றனர். அர்ஜூன், ஈரோடு மாவட்டம், கீழப்பள்ளம் நத்தக்காடையூர் பகுதியில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், குன்னூர் வெலிங்டன் போலீஸாரிடம், அர்ஜூன் மன்றாடியார் தனது மனைவி கல்பனா மீது புகார் கொடுத்துள்ளார். அதில், 2012ஆம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி முதல் ஈரோட்டில் மகேந்திரா பொலிரோ என்ற வாகனத்தை கல்பனா பயன்படுத்தி வந்தார்.
எங்களுக்குள் ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக தொடரப்பட்ட விவாகரத்து வழக்கு, ஊட்டி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி போலியாக கையெழுத்திட்டு அந்த வாகனத்தை கல்பனா பெயருக்கு மாற்றி உள்ளனர். எனவே, கல்பனா மீதும், டிரைவர் மணி மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.
இந்த புகார் குறித்து இரு தரப்பிலும் விசாரணை மேற்கொண்ட பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











