செப்டிக் டேங்க் மேலத்தான் சமையலே நடக்குது.. தரமற்ற உணவு.. சூரியின் ஓட்டல் மீது புகார்!

சென்னை: ராஜாஜி மருத்துவமனையில் இயங்கி வரும் நடிகர் சூரியின் குடும்பத்திற்கு சொந்தமான அம்மன் ஹோட்டலில் கழிவுநீர் தொட்டிக்கு மேலே சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்து வருவதாக சமூக ஆர்வலர் ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

நகைச்சுவை நடிகராக இருந்த நடிகர் சூரி தற்போது ஹீரோவாக அவதாரம் எடுத்து அசத்தி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான விடுதலை 2திரைப்படம் தியேட்டரில் வசூலை அள்ளி வருகிறது. நடிகராக இருந்த சூரி, தொழிலதிபராக மாறி மதுரையில் பல இடத்தில் ஓட்டலை நடத்தி வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், மதுரை ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் ஓட்டல் ஒன்றை தொடங்கி அதில் குறைந்த விலையில் உணவு தயாரித்து வழங்கி வந்தார். தற்போது, அந்த ஓட்டலில் தான் தரமான உணவு தயாரிக்கப்படவில்லை என சமூக ஆர்வலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

soori amman hotel

பொய்யான புகார்: அந்த புகார் மனுவில், விதிமுறைகளை மீறி ஓட்டல் நிர்வாகம், கூடுதல் இடத்தை ஆக்கிரமித்து இருப்பதாகவும் அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதில் அளித்த அம்மன் ஓட்டல் நிர்வாகம், கரிமேடு பகுதியில் உள்ள சமையல் கூடத்தில் தான் உணவு தயாரித்து, ஹோட்டலுக்கு கொண்டுவரப்படுகிறது என்றும், நடிகர் சூரி மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக அந்த நபர் இப்படி ஒரு பொய்யான குற்றச்சாட்டை கூறுவதாக அம்மன் ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தரமற்ற உணவு: இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சமூக ஆர்வலர், மதுரை ராஜாஜி மருத்துவமனையில் நடிகர் சூரியின், அம்மன் ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. அந்த ஹோட்டலில், தாரமற்ற முறையில் உணவு தயாரிக்கப்படுகிறது. அதாவது அம்மன் உணவகத்திற்கு ஒதுக்கப்பட்ட இடம், 433 சதுர அடி தான், செப்டிக் டேங்க் இடத்தையும், நர்ஸ் விடுதிக்கும் இடையே இருக்கும் அந்த இடத்தை ஆக்கிரமித்து, செப்டிக் டேங்க் மேல் வைத்து தான் சமையல் செய்கின்றனர். காய்கறி நறுக்குவது, சட்னி, சாம்பாரை வைப்பது என அனைத்து சமையலும் அந்த இடத்தில் தான் நடக்கிறது.

மூட வேண்டும்: எலி, கரப்பான் பூச்சி, பல்லி போன்றவை நடமாடும் இடத்தில் தரமற்ற முறையில் உணவுகளை தயாரித்து கொடுக்கிறார்கள். இந்த உணவைத்தான் பல நோயாளிகள் வாங்கி சாப்பிடுகின்றனர். அதுமட்டுமில்லாமல் நர்ஸ் விடுதியில் ஜன்னல் கதவை திறக்கவே முடியாத அளவிற்கு, இவர்கள் வாட்டர் கேனை அடக்கி வைத்து விடுகிறேன். இதனால் விடுதியில் இருப்பவர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து அம்மன் ஹோட்டலை மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருக்கிறேன் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X