முடியவே முடியாது.. முழு சம்பளத்தை வாங்கிக்கொண்டு இப்படி செய்யலாமா? ரெடின் கிங்ஸ்லி மீது புகார்!
சென்னை : முழு சம்பளத்தையும் வாங்கிக்கொண்டு நடிக்க மறுப்பதாக தயாரிப்பாளர் சங்கத்தில் நடிகர் ரெடின் கிங்ஸ்லி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இயல்பாக பேசுவது, உடல் மொழி என தனக்கென தனி ஸ்டைலை வைத்துக்கொண்டு மக்கள் மனதில் தனி இடத்தை பிடித்துவிட்டார் ரெடின் கிங்ஸ்லி.
பத்து தல, வாஸ்கோடகாமா, மார்க் ஆண்டனி, ஜெயிலர் என ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், யோகிபாபு, வினய், அர்ச்சனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தில் நடித்து பிரபலமானார். சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரித்த இப்படம் 100 கோடி வசூலாகி சாதனையை படைத்தது. இதில், ரெடின் கிங்ஸ்லி, வலிச்சா சொல்லப்போது கோமதி என்று இவர் பேசும் வசனமும், இவரது முக பாவனைகள் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது.

ஏகப்பட்ட ரசிகர்கள்
ரெடின் கிங்ஸ்லி ஏற்கெனவே கோலமாவு கோகிலா, நெற்றிக்கண்,அண்ணாத்த, பீஸ்ட், காத்துவாக்குல ரெண்டு காதல், கட்டா குஸ்தி, நாய் சேகர் ரிட்டன்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு இவர் பேசும் வசனங்கள் சமூக வலைதளங்களில் மீம்களாக வலம் வருகின்றன.

ரெடின் கிங்ஸ்லி மீது புகார்
இந்நிலையில்,நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் ரெடின் கிங்ஸ்லி புதிதாக லெக்பீஸ் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானதாகவும், இந்தப் படத்தில் நடிப்பதற்காக 10 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கி இருந்தார். இதற்காக அவருக்கு முழு சம்பளமும் கொடுக்கப்பட்டுவிட்டது.

நடிக்க மறுத்துவிட்டார்
ஆனால், நடிகர் ரெடின் கிங்ஸ்லி பத்து நாட்கள் நடிக்க சம்பளம் வாங்கிக் கொண்டு வெறும் நான்கு நாட்கள் மட்டுமே நடித்து கொடுத்ததாகவும், மீதம் உள்ள நாட்களில் நடிக்க முடியவே முடியாது என்று கூறிவிட்டார். இதனால், தனக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் மணிகண்டன் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.

உரிய விளக்கம் கொடுக்க வேண்டும்
மேலும், தனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ரெடின் கிங்ஸ்லி திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும், இல்லை என்றால், அவர் ஒப்புக்கொண்ட படி மீதம் இருக்கும் ஆறு நாள் கால்ஷீட்டில் நடித்துக் கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார். தயாரிப்பாளர் மணிகண்டன் அளித்துள்ள புகார் குறித்து, நடிகர் ரெடின் கிங்ஸ்லி தரப்பு விளக்கம் கொடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கர் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











