கடனை திருப்பி தரல..மிரட்டுறாரு.. நடிகர் சுந்தர்ராஜன் மீது கமிஷ்னர் அலுவலகத்தில் புகார்!

சென்னை : நடிகர் சுந்தர்ராஜன் கடனை வாங்கிக் கொண்டு மிரட்டுவதாக கமிஷ்னர் அலுவலகத்தில் ரங்கதாஸ் என்பவர் புகார் அளித்துள்ளார்.

இயக்குநர் பாக்யராஜிடம் உதவி வசனகர்த்தாவாக பணியாற்றி வருபவர் ரங்கதாஸ்.

நெய்வேலியை சேர்ந்த இவர், நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றி கடந்த 2000-ம் ஆண்டு ஓய்வுபெற்றார்.

Complaint against famous actor and director Sundarrajan in the commissioners office

கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் : இவர் பிரபல இயக்குநரும் நடிகருமான ஆர்.சுந்தர் ராஜன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில்,ரங்கதாஸ் என்னும் நான் கடந்த 2000-ம் ஆண்டு நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு இயக்குநர் பாக்யராஜிடம் உதவி வசனகர்த்தாவாக பணியாற்றி வருகிறேன்.

ரூ 20 லட்சம் : அப்போது ஆர்.சுந்தர்ராஜன் எனக்கு அறிமுகமானார், நாங்கள் இருவரும் நண்பர்களாக பழகி வந்த நேரத்தில் கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அடமானம் வைத்த என் வீடு மூழ்கும் நிலையில் உள்ளது. வீடு மீது வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் வீடு கையை விட்டு போய்விடும் என்பதால், 20 லட்ச ரூபாய் கடனாக கேட்டார்.

Complaint against famous actor and director Sundarrajan in the commissioners office

பணத்தை கேட்டால் மிரட்டுகிறார் : இயக்குநர் சுந்தர்ராஜன் கூறியதை நம்பி என் சேமிப்பு தொகையில் இருந்து 20 லட்ச ரூபாயை அவருக்கு கடனாக கொடுத்தேன். பணத்தை பெற்று கொண்ட இயக்குநர் சுந்தர்ராஜன், இதுநாள் வரை பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி வருகிறார். பணத்தை திருப்பி கேட்டால் மிரட்டுகிறார் என்றும், அவரிடம் கொடுத்த பணத்தை மீட்டு தரவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இவரது புகாரின் பேரில் விருகம்பாக்கம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொல்லை தருகிறார் : ஒரு பக்கம் கடன் கொடுத்தவர் புகார் கொடுக்க, இயக்குநர் சுந்தர்ராஜன் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், நெய்வேலியை சேர்ந்த ரங்கதாஸிடம் 20 லட்ச ரூபாய் கடனாக பெற்றேன். குறிப்பிட்டு கால அவகாசத்தில் பணத்தை அவருக்கு திருப்பி தர முடியவில்லை. இதனால், 20 லட்சத்திற்கான வட்டியை மாதம் மாதம் கொடுத்து வருகிறேன். இருப்பினும் ரங்கதாஸ் அடிக்கடி வீட்டிற்கு வந்து பணத்தை கேட்டு தொல்லை கொடுத்து மிரட்டுகிறார். இதனால், மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. எனவே ரங்கதாஸ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X