Leo: கடைசி நேரத்தில் லியோ டிரைலரால் வெடித்த சர்ச்சை.. போலீசில் புகார்!
சென்னை: லியோ படக்குழு மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்து மக்கள் கழகம் சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
லியோ படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தின் ப்ரமோஷன் பணிகள், போஸ்டர் பணிகள் எல்லாம் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். மேலும் விஜய்யின் மனைவியாக த்ரிஷா நடித்துள்ளார். மேலும், ஆங்ஷன் கிங் அர்ஜூன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், சாண்டி ஆகியோர் நடித்துள்ளனர்.
தளபதியின் லியோ: கடந்த எல்லாம் 30-ஆம் தேதி லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறுவதாக தகவல் வெளியாகி இருந்தது. ஆனால், பாதுகாப்பு காரணம் கருதி இசை வெளியீட்டு விழா நடைபெறாது என்று லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருந்தது.

சாதனை படைத்த டிரைலர்: லியோ படத்தின் டிரைலர் வெளியாகி இருந்தது. டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 22 மணி நேரத்தில் 30 மில்லியன் பாலோவர்களை கடந்து 2.5 மில்லியன் லைக்குகளை பெற்றுள்ளது. வரவேற்பை பெற்ற டிரைலரில் பெண்களை தவறான வார்த்தையில் சித்தரிக்கும் வகையில் இருப்பதாக பலர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
புதிய சர்ச்சை: இந்நிலையில், லியோ பட டிரைலரில் இடம்பெற்ற ஆபாச வார்த்தையை நீக்கக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்து மக்கள் கழகம் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் முன்னுதாரணமாக செயல்படாமல் ஆபாச வார்த்தையை பயன்படுத்தினால் நிஜ வாழ்க்கையில் எதிரொலிக்கும். டிரைலரை தணிக்கை செய்யாமல் யூடியூபில் வெளியிட்ட படக்குழு மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











