மோசடி செய்தாரா? 'கழுகு' கிருஷ்ணா மீது புகார்.. ஷூட்டிங்கில் இருப்பதால் அவகாசம் கேட்ட நடிகர்!

By

சென்னை: நடிகர் கிருஷ்ணா மீது போலீசில் மோசடி புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

கழுகு, யாமிருக்க பயமே, வீரா, யட்சன், யாக்கை, வன்மம், கழுகு 2 உட்பட சில படங்களில் நடித்தவர் கிருஷ்ணா.

இவர், பிரபல தயாரிப்பாளர் பட்டியல் சேகரின் மகன். இயக்குனர் விஷ்ணுவர்தனின் சகோதரர்.

டைரக்டர்ஸ் காலனி

டைரக்டர்ஸ் காலனி

சென்னை கோடம்பாக்கம் டைரக்டர்ஸ் காலனியில் வசித்து வருகிறார். இவரிடம் திலீப்குமார் என்பவர் மேலாளராக பல ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். இவர், அசோக் நகர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், நடிகர் கிருஷ்ணாவிடம் மேலாளராக வேலை செய்து வந்தேன்.

திருப்பித் தரவில்லை

திருப்பித் தரவில்லை

தொழில் தொடர்பாக என்னிடம் கிருஷ்ணா பணம் கேட்டார். அதன்படி 2016 ஆம் ஆண்டு மூன்று தவணைகளாக ரூ.10.43 லட்சம் கொடுத்தேன். ஆனால் பணம் வாங்கிய நடிகர் கிருஷ்ணா, அதன் பிறகு பணத்தையும் திருப்பித் தரவில்லை. வட்டியும் கொடுக்கவில்லை. பல முறை பணம் கேட்டும் அவர் உரிய பதில் அளிக்காமல் காலம் கடத்தி வருகிறார்.

போலீஸ் விசாரணை

போலீஸ் விசாரணை

எனவே தன்னிடம் பெற்ற ரூ.10.43 லட்சம் பணத்தை கிருஷ்ணாவிடம் பெற்று தர வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார். இதையடுத்து அசோக் நகர் போலீசார், நடிகர் கிருஷ்ணாவை தொடர்பு கொண்டு விசாரணை நடத்தினர். அப்போது கிருஷ்ணா, தற்போது படப்பிடிப்பு காரணமாக பொள்ளாச்சியில் இருப்பதாகச் சொன்னார்.

Recommended Video

Kazhugu 2 public review | அடர்வனத்தில் செந்நாய்களின் தாக்குதலுக்கு நடுவில் ஓர் அழகான காதல்-கழுகு 2
அவகாசம் வேண்டும்

அவகாசம் வேண்டும்

நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க 15 நாள் அவகாசம் அளிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். அதன்படி போலீசார், நடிகர் கிருஷ்ணாவுக்கு அவகாசம் அளித்துள்ளனர். அவர் நேரில் வந்து விளக்கம் அளித்த பிறகு தான் இந்த மோசடி குறித்து தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X