twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாரதிராஜாவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யக் கோரி போலீசில் புகார்!

    By Shankar
    |

    Recommended Video

    இயக்குனரை மாற்றிய அஜித்-வீடியோ

    சென்னை: ஆபாசமாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசியதாகக் கூறி இயக்குநர் பாரதிராஜாவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று கமிஷனர் அலுவலகத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வக்கீல் ராஜ்குமார், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது: எனது தாய்மொழி தெலுங்கு. பல நூறு ஆண்டுகளாக விழுப்புரம் மாவட்டம் டி எடையார் கிராமத்தில் எங்கள் முதாதையர்கள் வசித்தனர்.

    Complaint filed on Bharathiraja

    இப்போது எங்கள் குடும்பம் அங்குதான் வசிக்கிறது. இதுதான் எங்கள் மண். இயக்குநர் பாரதிராஜா ஒரு பேட்டியில், 'பிற மொழி பேசுவோர் தமிழகத்துக்கு வரலாம். போகலாம். நடிகர்களாக இருந்தால் சினிமாவில் நடிக்கலாம். ஆனால் தமிழகத்தையே ஆள நினைப்பது தவறு.

    தமிழகத்திலேயே பிறந்து இருந்தாலும் பிற மொழி பேசுவோர், தமிழகத்தை ஆள விட மாட்டோம்.
    ரஜினிகாந்த் உள்பட யாராக இருந்தாலும் அவர்களுக்கு இது பொருந்தும்' என்று பேசியுள்ளார்.
    பாரதிராஜாவின் பேச்சு இந்திய இறையாண்மைக்கும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் உள்ளது. ஆபாசமாகவும் பேசியுள்ளார். எனவே அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்."

    இவ்வாறு புகார் மனுவில் அவர் கூறியுள்ளார். இந்தப் புகாரை கமிஷனர் அலுவலகம் பெற்றுக் கொண்டுள்ளது.

    English summary
    A complaint was filed on director Bharathiraja for his speech against Indian sovereignty.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X