விஜய்யின் குடுமியை ஆட்டிடுவாங்க.. அசிங்கமா இல்லையா அண்ணே.. புகார் கொடுத்த கையோடு விட்டு விளாசிய ஜூலி
சென்னை: தவெக தலைவர் விஜய் கூறிய காளை மாடு குட்டி ஸ்டோரியை வைத்து ஜூலி விமர்சித்து ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதற்கு தவெகவினர் அளவுக்கு மீறி அசிங்கமாக பேசினார்கள். அதற்கும் சளைக்காமல் இருந்த ஜூலி; ஒருகட்டத்தில் பொறுத்துக்கொள்ள முடியாமல் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகாரும் கொடுத்திருக்கிறார். இந்நிலையில் பிக்பாஸ் ஜூலி மீண்டும் விஜய்யை விமர்சித்து புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதுவும் ட்ரெண்டாகியுள்ளது.
தவெக தலைவரும், நடிகருமான விஜய் கடந்த மாதத்தில் வேலூரில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் காளை மாடு தொடர்பாக குட்டி ஸ்டோரி ஒன்றை சொன்னார். அவரது குட்டி ஸ்டோரிக்கு வழக்கம்போல் அவருடைய ரசிகர்களும், கட்சியினரும் விசில் அடித்து வரவேற்பு கொடுத்தார்கள். ஆனால் பிக்பாஸ் ஜூலியோ சகட்டுமேனிக்கு விளாசி வீடியோ வெளியிட்டிருந்தார். அதனையடுத்து தவெகவின் விர்ச்சுவல் வாரியர்ஸ் ஜூலி மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றி அவதூறாகவும், மோசமாகவும் கருத்து தெரிவித்தார்கள்.

பதிலடி கொடுத்த ஜூலி: அதற்கு ஜூலியும் தரமான பதிலடி கொடுத்திருந்தார். கரூர் சம்பவத்தின்போது விஜய் வெளியிட்டது மாதிரியே ஒரு வீடியோவை வெளியிட்டு, 'அண்ணா நான் வீட்டில்தான் இருப்பேன்' என ஒரே போடாக போட்டிருந்தார். நாம் அவதூறாக பேசினால் அவர் அடங்கிவிடுவார் என நினைத்திருந்த விர்ச்சுவல் வாரியர்ஸுக்கு ஜூலியின் அந்த வீடியோ மேற்கொண்டு பதற்றத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியது. இதன் காரணமாக இன்னும் அசிங்கமாக பேசினார்கள்.
ஜூலி கொடுத்த புகார்: இதனையடுத்து ஜூலி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருக்கிறார். அந்தப் புகாரில், "கிட்னி விற்பனை மோசடியில் தன்னை தொடர்புபடுத்தி ஆதாரமற்ற பொய்யான வீடியோக்களை வெளியிட்டு மன உளைச்சலை ஏற்படுத்துகிறார்கள். அவர்கள் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்" என வேண்டுகோள் வைத்திருக்கிறார். தவெக நிர்வாகி உட்பட மொத்தம் எட்டு பேர் மீது இந்தப் புகாரை அவர் கொடுத்திருக்கிறார்.
ஜூலியின் புதிய வீடியோ: இந்நிலையில் ஜூலி புதிய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில், "வணக்கம் மக்களே. எம்ப்ட்டி சிலிண்டர் எல்லாம் வாங்கி வைத்துவிட்டீர்களா?.. மோடி இதிலும் நமது வயிற்றில் அடித்துவிடப்போகிறார். நம்ம விஜய் அண்ணா வழக்கம்போல் இதற்கும் எதுவும் பேசமாட்டார். அப்படி ஏதாவது பேசினால் மோடி ஜி சிபிஐயை வைத்து விஜய் அண்ணாவின் குடுமியை ஆட்டிவிடுவார். பாஜகவுடன் தவெக சேருமா என பேச்சுக்கள் இருக்கின்றன. நானே சொல்கிறேன். கண்டிப்பாக அவர் சேரமாட்டார்.
அசிங்கம் இல்லையா?: ஏனெனில் பாஜகவை எதிர்க்கும் மாநிலம் தமிழ்நாடு. பாஜகவுக்கு எதிரானவர்கள் நாங்கள் என்பதை அவர்கள் செட் செய்வார்கள். கொள்கை எதிரியோடு சேரவில்லை பார்த்தீர்களா என்றுதான் அவர்களால் வாக்கு கேட்க முடியும். அதற்காக செய்யக்கூடிய ஜோக்தான் இது. இதை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம். உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களியுங்கள். நம் பேஸ்கட் பால் அண்ணா சரக்கு பாட்டிலை எடுத்துட்டு போய் மாட்டிக்கொண்டதாக சொல்கிறார்கள். எதற்கு அண்ணா இது?.. கட்சிக்கு அசிங்கம் இல்லையா?.. சட்டம் தன் கடமையை செய்யும். தீ பரவட்டும்.. வழக்கம்போல் வல்கர் வாரியர்ஸ் வந்து உங்கள் வன்மத்தை கக்கிவிட்டு செல்லுங்கள். தவெகதான் பாஜக. பாஜகதான் தவெக. விஜய் பாஜகவின் பி டீம் எல்லாம் இல்லை, ஏ டீம்தான்" என்றார்.


Click it and Unblock the Notifications















