தயாரிப்பாளர் சங்கத்தைக் கைப்பற்ற முயற்சி - எஸ்ஏசி, தாணு, தேனப்பன் மீது கமிஷனரிடம் புகார்!

மேலும் தயாரிப்பாளர் சங்கக் கட்டடத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து இப்ராகிம் ராவுத்தர் கூறுகையில், "சட்டப்படிதான் நாங்கள் சந்திரசேகரனையும், தாணுவையும், தேனப்பனையும் நீக்கியுள்ளோம். ஆனால் அவர்கள் இன்னும் தாங்களே சங்கம் என்று கூறி, கட்டடத்தைக் கைப்பற்ற முயற்சித்து வருகின்றனர்.
6 மாத காலத்துக்கு சஸ்பென்ட் செய்யப்பட்ட இவர்களை சங்கக் கட்டடத்துக்குள்ளேயே விடக்கூடாது என்று முடிவு செய்துள்ளோம். அதையும் மீறி சட்டவிரோதமாக கைப்பற்றல் முயற்சியை அவர்கள் மேற்கொள்ளக் கூடும் என்பதால், கமிஷனர் அலுவலகத்தில் இவர்கள் மீது புகார் தருகிறோம்.
மேலும் கட்டடத்துக்கு போலீஸ் பாதுகாப்பு தருமாறு காவல்துறையைக் கேட்டுக் கொள்கிறோம்," என்றார்.
கமிஷனர் அலுவலகத்தில்...
பின்னர் கே.ஆர்.ஹென்றி முக்தா சீனிவாசன், கே.ராஜன் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் இன்று எழும்பூரில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு கமிஷனர் திரிபாதியை சந்தித்து மனு கொடுத்தனர்.
பின்னர் வெளியே கே.ராஜன் நிருபர்களிடம் கூறுகையில், "நாங்கள் பொதுக்குழுவை கூட்டி, சங்கத்தின் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன், செய லாளர் தேனப்பன், பொரு ளாளர் தாணு ஆகியோரை ஆறு மாதம் சங்கத்தில் இருந்து நீக்கி உள்ளோம். இதனால் எஸ்.ஏ.சந்திர சேகரனும் அவருடன் இருப் பவர்களும் சங்க அலுவலகத்தில் நுழைய திட்டமிட்டுள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் பிரச்சினை உருவாகலாம். எனவே கமிஷனரை சந்தித்து சங்க நிர்வாகிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம்," என்றார்.


Click it and Unblock the Notifications











