இந்தா வந்துருச்சுல்ல.. சாக்கடையா.. ரத்தம்மா.. சூரரைப்போற்று படத்தை தடை செய்யக்கோரி போலீஸில் புகார்!

சென்னை: சூரரைப் போற்று படத்தை தடை செய்யக் கோரி நடிகர் சூர்யாவுக்கு எதிராக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

Soorarai Pottru- Mannurunda Lyrical video | Surya | G.V.Prakash | Sudha Kongara

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் சூரரை போற்று. சூர்யாவின் 38-வது திரைப்படமான இப்படத்தை'இறுதிச் சுற்று' இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார்.

அபர்ணா பாலமுரளி நடிக்கும், இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்

2டி என்டெர்டெய்ன்மென்ட்

2டி என்டெர்டெய்ன்மென்ட்

இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வரும் இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.

மண்ணுருண்ட..

மண்ணுருண்ட..

படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடைபெற்று வரும் நிலையில் படத்தின் போஸ்டர்கள், டீசர் மற்றும் தீம் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள மண்ணுருண்ட என்ற பாடலை படக்குழு நேற்று முன்தினம் வெளியிட்டது.

திங்கள் கிழமை

திங்கள் கிழமை

ஏகாதசி எழுதியுள்ள இந்தப் பாடலை நாட்டுப்புற பாடகர் செந்தில் கணேஷ் பாடியுள்ளார். சவ ஊர்வலத்தின் போது பாடப்படும் குத்துப் பாடலாக இந்தப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கள் கிழமை இந்தப் பாடல் வெளியானது. இந்த பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகி வருகிறது. இந்நிலையில் இந்த பாடலுக்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

சர்ச்சை

சர்ச்சை

அதாவது, இந்தப் பாடலில் இடம் பெற்றுள்ள கீழ் சாதி உடம்புக்குள்ள ஓடுறது சாக்கடையா? அந்த மேல் சாதிக்காரனுக்கு கொம்பு இருந்தா காட்டுங்கய்யா என்ற வரி இடம்பெற்றுள்ளது. இந்த வரிகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கொங்கு வேளாளக்கவுண்டர்கள் பேரவை சார்பில் கோவை போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சாக்கடையா?

சாக்கடையா?

அதில் நடிகர் சூர்யா தயாரிப்பில் அவர் நடித்து வெளி வர இருக்கும் சூரரைப்போற்று என்ற திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சி, தற்போது இணையதளம் வாயிலாக உலாவிக் கொண்டிருக்கிறது. அதில் வரும் கீழ்ஜாதி உடம்புக்குள்ள ஓடுவது சாக்கடையா மேல் ஜாதிக்காரனுக்கு கொம்பு இருந்தா காட்டுங்கய்யா என்ற பாடல் வரி இடம் பெற்றுள்ளது.

தடை செய்யுங்க

தடை செய்யுங்க

இந்த பாடல் பல்வேறு வகையில் ஜாதி மோதல்களை உருவாக்கும் என்பதால் அந்த படத்தை தடை செய்து அமைதியாக உள்ள தமிழகத்தையும் சமூக மக்களையுத் சீர்குலைக்க காரணமாக உருவாகிக் கொண்டிருக்கம் இதுபோன்ற படத்தை தடை வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் நடிகரும் தயாரிப்பாளருமான சூர்யாவுக்கும் கொங்கு வேளாளக்கவுண்டர்கள் பேரவை சார்பில் கடும் கண்டனமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X