கோடிக்கணக்கில் சம்பளம் கேட்கும் நடிகர்களுக்கு ஆப்பு வைக்கப் போகும் ஏஐ.. அடேங்கப்பா டிரம்ப் வேறயா!

சென்னை: சினிமா உலகில் பெரிய செட் போட வேண்டும் என்றால் ஆர்ட் டைரக்டர் ஒரு பெரிய பட்ஜெட் தீட்டி விடுவார். அது போல பின்னணி இசைக்கு இசையமைப்பாளரும், ஹாலிவுட் படங்கள் என்றால் சிஜி உருவாக்க பெரிய கிராபிக்ஸ் நிறுவனங்களும் கோடிக் கணக்கில் சம்பளம் கேட்கின்றனர். அவர்களை எல்லாம் விட ஹீரோக்களின் சம்பளம் பல நூறு கோடிகளை தாண்டி சென்றுக் கொண்டிருக்கும் நிலையில், முழுவதுமாக ஏஐ தொழில்நுட்பத்தால் குறும்படங்கள் ஹாலிவுட் தரத்துக்கு உருவாகி வருகின்றன.

கூடிய சீக்கிரமே ஹாலிவுட் படங்களுக்கு பெரிய போட்டியாக ஏஐ படங்கள் களத்தில் குதிக்கும் என்கிற அச்சம் இப்போதே ஹாலிவுட் நடிகர்களை ஆட்கொள்ள ஆரம்பித்து விட்டது. ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை கோடிக் கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்களுக்கு தலைவலியாக ஏஐ படங்கள் மாறப் போவதாக கூறுகின்றனர்.

Completely made by AI In future - all a film maker needs is a script - Prashanth Rangaswamy tweeted
Photo Credit:

புதிதாக உருவாகி உள்ள ஏஐ குறும்படத்தின் காட்சிகளை வெளியிட்டு விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி பதிவிட்டுள்ள ட்வீட் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

வரமா? சாபமா?: நடிகைகள் நயன்தாரா, த்ரிஷா, ராஷ்மிகா மந்தனா தொடங்கி இளம் நடிகையான சாரா அர்ஜுன் வரை ஒருவரையும் விடாமல் ஒரு பக்கம் ஏஐ எடிட்கள் மூலம் ஆபாசத்தைக் கொட்டி வருகின்றனர். வெறும் டவலுடன் நடிகைகள் காமத்தைத் தூண்டும் போஸ்களை கொடுப்பது போன்ற புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. சில நெட்டிசன்கள் அதை உருவாக்கி சம்பாதிக்கத் தொடங்கியுள்ளனர். பிகினி உடைகளை தாண்டி முழு நிர்வாண புகைப்படங்களும், வீடியோக்களும் பிரபல நடிகைகளின் முகங்களை வைத்து டீப் ஃபேக்காக உருவாக்கப்பட்டு ஆபாச இணையதளங்களில் கல்லா கட்டி வருகின்றன.

சினிமாவில் புதிய புரட்சி: புகைப்படங்கள் மெளனப் படங்களாக திரையில் ஓடின. அதன் பின்னர், வசனங்கள், இசை இணைந்தன. கிராபிக்ஸ் காட்சிகள் புதிதாக உருவாகும் போது ஹீரோக்கள் சூப்பர் ஹீரோக்களாக மாறினர். இன்னொரு பக்கம் ஹீரோக்களே இல்லாமல் அனிமேஷன் படங்களும் உலகளவில் வசூல் வேட்டை செய்து ரசிகர்களை கவர, ஜப்பானில் இருந்த டிரெண்டான அனிம் படங்களுக்கு இளைஞர்கள் அடிமையானார்கள். இந்நிலையில், எல்லாத்தையும் புரட்டிப் போடும் அளவுக்கு ஏஐ தொழில்நுட்பம் சினிமா உள்பட ஏகப்பட்ட தொழில்களில் உள்ளே புகுந்து பல மனிதர்களின் வேலைக்கு வேட்டு வைத்து வருகின்றன.

ஸ்க்ரிப்ட்டும் நேரமும் இருந்தா போதும்: இனிமேல், ஹாலிவுட் படங்களை பார்த்து வாயை பிளக்க வேண்டாம். நாமே ஹாலிவுட் படங்களை விட பிரம்மாண்ட படங்களை உருவாக்க முடியும். ஸ்க்ரிப்ட்டும் போதிய நேரமும் இருந்தால் போதும், நம்முடைய கதைகளை படங்களாக கொடுக்க முடியும் என பிரசாந்த் ரங்கசாமி புதிதாக உருவாகி உள்ள குறும்பட வீடியோவை வெளியிட்டு ட்வீட் போட்டுள்ளார். முழுக்க முழுக்க ஏஐ மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த படக் காட்சிகள் அப்படியே தத்ரூபமாக ஒரு ஹாலிவுட் படத்தை பார்ப்பது போலவே உள்ளது.

டிரம்ப் வேற இருக்காரு: அமெரிக்காவில் நடைபெறும் திடீர் தாக்குதலை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த குறும்படத்தின் இறுதியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் வரும் காட்சிகளும் அப்படியே தத்ரூபமாக இடம்பெற்றுள்ள நிலையில், ரசிகர்கள் இனிமேல் ஏஐ தொழில்நுட்பத்தை கடிவாளம் எல்லாம் போட்டுக் கட்ட முடியாது. பல பிரபல நடிகர்கள் 100 கோடி, 200 கோடி ஒரு நாள் விளம்பரத்தில் நடிக்க 2 கோடி எல்லாம் கேட்டுக் கொண்டிருக்க முடியாது. இனிமேல் விளம்பரம் முதல் ஹாலிவுட் லெவல் வரையிலான படங்கள் வரை ஏஐ மூலமே உருவாகி விடும் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X