சின்ன மச்சான் செவத்த மச்சான் அம்ரீஷ் பிறந்த நாள்- வாழ்த்திய விஜய் சேதுபதி
சென்னை: நடிகரும் இசையமைப்பாளருமான அம்ரீஷ் அக்டோபர் 15ஆம் தேதியன்று தனது 31ஆவது பிறந்த நாளை தன்னுடைய தாயார் நடிகை ஜெயசித்ரா வீட்டில் வெகு விமரிசையாக கொண்டாடினார். இந்த விழாவில் விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அம்ரீஷ்க்கு வாழ்த்து கூறினார்.
நடிகை ஜெயசித்ரா தயாரித்து எழுதி இயக்கிய நானே என்னுள் இல்லை என்ற படம் மூலம் கதாநாயகனாகவும், இசையமைப்பாளராகவும் அறிமுகப்படுத்தப்பட்டவர் அம்ரீஷ்.

அன்று இசையமைப்பாளராக தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கியவர் அடுத்தடுத்து, மொட்ட சிவா கெட்ட சிவா, பாஸ்கர் ஒரு ராஸ்கல், சார்லி சாப்ளின் 2, பொட்டு, சத்ரு போன்ற படங்களுக்கு இசையமைத்தார்.
அம்ரீஷ் இசையமைத்த சார்லி சாப்ளின் 2 படத்தில் இடம் பெற்ற ஏய்ய்... சின்ன மச்சான் செவத்த மச்சான் பாடல் இன்றைக்கும் ட்ரெண்டிங்கில் உள்ளது.
தற்போது, கர்ஜனை, யங் மங் சங், வீரமாதேவி, பரமபத விளையாட்டு, கா போன்ற படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இவரின் பிறந்தநாளை அவரது தாயார் கலைமாமணி நடிகை ஜெயசித்ரா இல்லத்தில் கடந்த அக்டோபர் 15ஆம் தேதியன்று பிரம்மாண்டமாக கொண்டாடினார்.
இந்த விழாவில் விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அம்ரீஷ்க்கு வாழ்த்து கூறினார். தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ், டி.சிவா, நமிதா, இயக்குநர் சாய் ரமணி, இயக்குநர் ரத்னா சிவா, படத்தொகுப்பாளர் கிஷோர் ஆகியோரும் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்கள்.


Click it and Unblock the Notifications











