அண்ணாத்த படத்துக்கு பாடிய எஸ்.பி.பி., பிரத்யேக புகைப்படங்களை வெளியிட்ட இசையமைப்பாளர் இமான்!

சென்னை: அண்ணாமலை, அருணாச்சலம், பாட்ஷா, முத்து, படையப்பா, சந்திரமுகி, சிவாஜி, எந்திரன், பேட்ட, தர்பார் என ஏகப்பட்ட ரஜினி படங்களின் ஓப்பனிங் பாடல்களை பாடியுள்ள எஸ்.பி. பாலசுப்ரமணியம் கடைசியாக ஒரு முறை அண்ணாத்த படத்திற்கும் ஓப்பனிங் பாடலை பாடி உள்ளார்.

அதன் அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட இசையமைப்பாளர் இமான், அவருடன் எடுத்துக் கொண்ட பிரத்யேக புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

ஜில்லா படத்திற்காக

ஜில்லா படத்திற்காக

இசையமைப்பாளர் இமான் வீடியோ வெளியிட்டு எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கான இரங்கலை தெரிவித்து உள்ளார். அவர் பேசும் போது, எஸ்.பி.பி. சாருடன் பணியாற்றும் வாய்ப்பு தனக்கு குறைவாகவே கிடைத்தது என்றும், நடிகர் விஜய்யின் ஜில்லா படத்தின் ஓப்பனிங் பாடலான பாட்டு ஒன்று கட்டு கட்டு தோழா பாடலை எஸ்.பி.பி. பாடி கொடுத்தார் என்று நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

கடைசி பாடல்

கடைசி பாடல்

இயக்குநர் சிவா இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மினா, குஷ்பு, சூரி, சதீஷ், பிரகாஷ் ராஜ் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தில் இடம்பெற்றுள்ள ஓப்பனிங் பாடலையும் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடியுள்ளார். சூப்பர்ஸ்டாருக்காக ஏகப்பட்ட ஓப்பனிங் பாடலையும் காதல் பாடல்களையும் பாடியுள்ள எஸ்.பி.பி கடைசியாக ஒரு முறை அண்ணாத்த படத்திற்காக பாடி உள்ளார்.

பிரத்யேக புகைப்படங்கள்

பிரத்யேக புகைப்படங்கள்

மேலும், பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடன் அண்ணாத்த பாடல் பதிவின் போது இயக்குநர் சிவா, இசையமைப்பாளர் டி. இமான், பாடலாசிரியர் விவேகா உள்ளிட்டோர் எடுத்துக் கொண்ட பிரத்யேக புகைப்படங்களையும் இமான் தற்போது ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளார்.

விவேகா உருக்கம்

விவேகா உருக்கம்

"எனது இரண்டாவது பாடலான 'தாவணியே'' (வானத்தைப் போல)-ல் ஆரம்பித்த உறவு அவரது கடைசிப் பாடல் வரை தொடர்ந்தது... காற்று மண்டலமே உங்களைக் கைகூப்பித் தொழும் எஸ்.பி.பி சார்! குரலரசன் திரு எஸ்.பி.பி அவர்களோடு அண்ணாத்த படத்தின் தொடக்கப் பாடல் பதிவில்..." என பாடலாசிரியர் விவேகா உருக்கமான பதிவை இட்டுள்ளார்.

எப்போது வெளியாகும்

எப்போது வெளியாகும்

எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைந்த நிலையில், அவரது நினைவாக வெகு விரைவாக அந்த பாடலை வெளியிட வேண்டும் என அண்ணாத்த படக்குழுவினருக்கு ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். கடைசியாக தர்பார் படத்தில் அவர் பாடிய சும்மா கிழி பாடல் வேற லெவலில் ஹிட் ஆனது. இந்த பாடல் வெளியானால் வரலாறு படைக்கும் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X