புஷ்பா 2: தப்பு என் மேல இல்ல சார்.. தயாரிப்பாளரை மேடையில் விளாசிய தேவி ஸ்ரீ பிரசாத்!
சென்னை: புஷ்பா 2: தி ரூல் திரைப்படத்தை இயக்குநர் சுகுமார் எழுதி இயக்குகிறார். இப்படம் பல மொழிகளில் டிசம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட தயாராக இருகிறது. இப்படத்தில் அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது.
புஷ்பா 2 படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா, பாட்னாவில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில்,சென்னையில் நேற்று கிஸ்ஸிக் பாடல் வெளியீட்டுவிழா நடைபெற்றது. இதில் பேசிய இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாந்த், தயாரிப்பாளர் குறித்து பிரசாத் ஆவேசமாக பேசியது சர்ச்சையாக வெடித்துள்ளது.

தேவி ஸ்ரீ பிரசாந்த்: அதில் பேசிய அவர், புஷ்பா படம் வெளியானதுக்குப்பின் அந்த படத்தை ஒரு திருவிழா போல கொண்டாடுனீங்க, ஆனால், புஷ்பா 2 திரைப்படம் வெளியாவதற்கு முன்பே, அதை, கொண்டாடிட்டு வரீங்க, இத பாக்குறதுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. புஷ்பா படத்திற்காக எனக்கும் அல்லு அர்ஜூனுக்கும் தேசிய விருது கிடைத்தது அது எனக்கு கிடைத்தது மிகப்பெரிய பாக்கியமாக நான் கருதுகிறேன். புஷ்பா இரண்டாம் பாகத்தை பார்த்தேன் படம் மிகவும் சூப்பராக வந்து இருக்கிறது.
படத்தின் கதை, அல்லு அர்ஜூனின் நடிப்பு என அனைத்தும் வேற லெவில் இருக்கிறது. இந்த படத்திற்காக அல்லு அர்ஜூன் மற்றும் இயக்குநர் சுகுமார் ரொம்ப கடுமையாக உழைத்து இந்த படத்தை முடித்து இருக்கிறார்கள். இந்த விழாவிற்கு கூட சுகுமாரால் வரமுடியவில்லை படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்கான வேலை போய் கொண்டு இருக்கிறது என்றார்.
கேட்டுத்தான் வாங்க வேண்டும்: அப்போது அங்கிருந்த ரசிகர்கள் தெலுங்கில் பேச சொல்லி கத்தியதால், தெலுங்கில் பேசிய தேவி ஸ்ரீ பிரசாத், இப்படித்தான் நமக்கு என்ன வேண்டுமோ, அதை கேட்டு வாங்கிவிட வேண்டும். தயாரிப்பாளர்கள் கொடுக்கும் சம்பளமாக இருந்தாலும் சரி, ஒரு பணிக்கான நமக்கு வரும் பாராட்டாக இருந்தாலும் சரி, அதை நாம் அதை கேட்டு பெற்றுக்கொள்ள வேண்டும். நாம் கேட்வில்லை என்றால், யாரும் நமக்குத் தகுதியான நன்மதிப்பைக் கொடுக்க மாட்டார்கள் என்றார்.
ஆவேசமாக பேசினார்:தொடர்ந்து பேசிய தேவி ஸ்ரீ பிரசாத், ரவி சார், நான் சரியான நேரத்தில் பாடலை தரவில்லை, சரியான நேரத்தில் இசையமைக்கவில்லை, சரியான நேரத்திற்கு நிகழ்ச்சிக்கு வரவில்லை என்று குறை கூறுகிறீர்கள். உங்களுக்கு என் மீது அன்பு இருக்கு, இருந்தாலும் அதைவிட அதிகமாக புகார்களை கூறி இருக்குறீர்கள். இன்று கூட நான் நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்பே வந்துவிட்டேன். ஆனால் வெளியில் இருந்தவர்களை என்னை உள்ளே வரவிடாமல், நீங்கள் உள்ளே வருவதை படமாக்க வேண்டும் என்று கூறி 25 நிமிடம் நிற்க வைத்துவிட்டார்கள். அது எனது தவறில்லை சார். இதையெல்லாம், தனியாக கேட்டால் கிக் இருக்காது, என்னுடைய பழக்கம் எதுவாக இருந்தாலும் நேரடியாக கேட்டுடுவேன் என்று தேவி ஸ்ரீ பிரசாத், மேடையிலேயே தயாரிப்பாளரை அலறவிட்டார்.
இதுதான் காரணமா: ’புஷ்பா 2’ படத்தின் பின்னணி இசை அமைக்கும் பொறுப்பில் இருந்து தேவி ஸ்ரீ பிரசாத் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக தமன், சாம் சி.எஸ், அஜ்னிஷ் லோக்நாத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த தகவல் வெளியான போது, என்ன பிரச்சினை என தெரியாமல் அனைவரும் குழம்பிய நிலையில், தற்போது, தேவிஸ்ரீ பிரசாத் பேசி இருப்பதன் மூலம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இருவருக்கும் பிரச்சினைகள் இருப்பது தெளிவாகிறது. இதனால் தான், 'புஷ்பா 2’ மற்றும் 'குட் பேட் அக்லி’ படத்திலிருந்து தேவி ஸ்ரீ பிரசாத் நீக்கப்பட்டு இருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications











