twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இசையமைக்க இடைஞ்சல்…இளையராஜாவை வெளியேற்ற துடிக்கும் பிரசாத் ஸ்டுடியோ

    |

    சென்னை: இசையமைப்பாளர் இளையராஜா நீண்ட காலமாக பயன்படுத்தி வந்த பிரசாத் டீலக்ஸ் ரெக்கார்டிங் ஸ்டுடியோவை இனிமேல் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இளையராஜாவை அங்கிருந்து வெளியேற்றவே இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், இதற்கு முக்கிய காரணம் எல்.வி.பிரசாத்தின் பேரன் சாய் பிரசாத் என்று சொல்லப்படுகிறது.

    இதனையடுத்து, இளையராஜாவை அவருடைய இசைப் பணியை செய்ய விடாமல் இடையூறு விளைவிப்பதாகவும், ஸ்டுடியோவின் நுழைவு வாயிலில் மரச்சாமான்களையும், கணினிகளையும் அடுக்கி வைத்திருப்பதாகவும், இளையராஜாவின் இசைக் கருவிகளை சேதமடைய செய்வதாகவும் சாய் பிரசாத் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    Composer Ilaiyaraaja complaint filed against L.V.Prasad Studio

    நம் மனதில் என்றுமே நீங்காத ஒரு தனி இடத்தை தக்க வைத்துள்ளவர் இசைஞானி இளையராஜா. அவரின் பெரும்பாலான படங்கள் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றன. ராஜாவின் பாணியைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான அம்சம் என்னவென்றால், அவர் உச்சத்தில் இருந்து இசையமைத்த அனைத்து பாடல்களுமே சென்னை சாலிகிராமத்தில் பிரசாத் டீலக்ஸ் ரெக்கார்டிங் தியேட்டரில் தான் பாடல் பதிவு செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

    அவருக்கென்று ஒரு தனி ஸ்டுடியோவை அவர் உருவாக்கிக் கொள்ளவில்லை. அந்த இடம் அவருடன் ஒன்றோடு ஒன்றாக அவரின் உணர்ச்சிகளோடு கலந்த ஒரு இடம். பிரசாத் ஸ்டுடியோவின் நிறுவனரான எல்.வி.பிரசாத்தின் பிரசாத் ஸ்டுடியோவில் அமைந்திருக்கும் ஒரு கட்டிடத்தை இளையராஜா பயன்படுத்திக் கொள்வதற்காக பல ஆண்டுகளுக்கு முன்னர் கொடுத்திருக்கிறார்.

    அதற்காக இளையராஜா ஒரு குறிப்பிட்ட தொகையை வாடகையாக வழங்கி வருகிறார். மேலும் அவருக்காக இசையமைத்த ஒவ்வொரு கலைஞரும் அவரவர்களின் இசைக்கருவிகளை அங்கேயே விட்டு விடுவார்கள். இப்படி பொக்கிஷமாக வைக்கப்பட்டிருந்த அந்த இடத்தை உபயோகப்படுத்துவதில் ஒரு சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தற்போது பிரசாத் ஸ்டுடியோஸின் இயக்குநராக இருப்பவர் எல்.வி.பிரசாத்தின் பேரனான சாய் பிரசாத். இளையராஜாவை அவருடைய இசைப் பணியை செய்ய விடாமல் இடையூறு விளைவிப்பதாகவும், ஸ்டுடியோவின் நுழைவு வாயிலில் மரச்சாமான்களையும், கணினிகளையும் அடுக்கி வைத்திருப்பதாகவும், இளையராஜாவின் இசைக் கருவிகளை சேதமடைய செய்வதாகவும் சாய் பிரசாத் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக இளையராஜாவின் மேனேஜரான கஃபார் விருகம்பாக்கத்தில் உள்ள காவல் நிலையத்தில் பிரசாத் ஸ்டுடியோஸ் நிர்வாகம் மீது புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் உண்மைத் தன்மையை கண்டறிந்த பின்னர் காவல் துறையினர் தங்களது விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    20 வருடங்களாக இளையராஜாவுக்கு ஒரு இசைக்கோயில் போல் இருந்த பிரசாத் ஸ்டூடியோவில் அவர் நுழைந்து பல நாட்கள் ஆகின்றன. சர்ச்சையில் இருக்கும் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்து மீண்டும் இளையராஜா ஸ்டுடியோவிற்குள் நுழைவாரா என்பதே சந்தேகமாக உள்ளது என்கிறார்கள் அந்த ஸ்டூடியோ தரப்பினர்.

    இளையராஜாவை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் இது நடைபெறுகிறது என்று எண்ணத் தோன்றுகிறது. மேலும் இளையராஜா உடன் பணிபுரியும் சக ஊழியர்களாக இருக்கட்டும் அல்லது கோரஸ் பாடுபவர்களாக இருக்கட்டும் அவர்களின் வளர்ச்சி என்பது மிகவும் தாமதமாக தான் இருக்கும். இது அனைவரும் அறிந்த ஒரு செய்தி.

    இருப்பினும் இளையராஜாவை பிரசாத் ஸ்டுடியோவில் இருந்து வெளியேற்ற நினைப்பதின் நோக்கம் குறித்து பல கருத்துக்கள் வெளியிடப்பட்டாலும் அதன் உண்மை நிலவரம் இதுவரையில் அறியப்படவில்லை. காரணம் எதுவாக இருப்பினும் மிகவும் வேதனையில் இருப்பது ராஜாவின் கோடிக்கணக்கான ரசிகர்கள் தான்.

    English summary
    The Prasad Deluxe Recording studio, used by composer Ilaiyaraaja for a long time, is no longer in use. The main reason for this is said to be Sai Prasad, grandson of LV Prasad.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X