இசையமைப்பாளர் இஷான் தேவுக்கு இன்று பிறந்தநாள்.. குவியும் வாழ்த்துக்கள்!

சென்னை : மலையாள திரையுலகில் தற்போது பலராலும் உற்று நோக்கப்படும் வளர்ந்து வரும் இசையமைப்பாளர் இஷான் தேவ்.

மலையாளத்தில் பல்வேறு திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள இவர் தமிழ் மற்றும் கன்னட மொழிகளிலும் பல்வேறு திரைப்படங்களுக்கு இசையமைத்தது மட்டுமல்லாமல் பாடல்களையும் பாடி அனைவரையும் ரசிக்க வைத்து வருகிறார்.

இசையமைத்த ஓரிரு திரைப்படங்களிலேயே மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுள்ள இஷான் தேவ் ஆகஸ்ட் 13 ஆம் தேதியான இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருவதையொட்டி இவரது நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

பல்வேறு அங்கீகாரங்கள்

பல்வேறு அங்கீகாரங்கள்

இந்தியாவில் பல்வேறு மொழிகளில் இருந்தும் ஆண்டுக்கு பல நூறு திரைப்படங்கள் வெளியாகிக்கொண்டே வரும் நிலையில் மலையாளத் திரைப்படங்களுக்கு என்று என்றுமே தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது. எதார்த்தமான கதைகளை கொண்டு தொடர்ந்து திரைப்படங்களாக வெளியாகி வரும் மலையாளத் திரைப்படத்துறையிலிருந்து பல்வேறு சிறந்த இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், நடிகர்கள் என இந்திய அளவில் பல்வேறு அங்கீகாரங்களை பெற்று வருகின்றனர்.

தீம் சாங்

தீம் சாங்

இந்நிலையில் சமீபத்தில் தனது இசையின் மூலம் அனைவரையும் ரசிக்க வைத்து வரும் இசையமைப்பாளர் இஷான் தேவ் மலையாளத்திரையுலகில் பலராலும் உற்று நோக்கப்படும் வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார். தி டய்கர் மற்றும் சிந்தாமணி கொலை கேஸ் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு "தீம் சாங்" அமைத்து ரசிகர்களை கவர்ந்த இவர் தற்பொழுது தமிழ் திரைப்படங்களுக்கும் இசை அமைத்துக்கொண்டு வருகிறார்.

பல்வேறு பாராட்டுகளை

பல்வேறு பாராட்டுகளை

தமிழில் என் ஆளோட செருப்ப காணோம், பட்டினப்பாக்கம் மற்றும் மிக மிக அவசரம் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள இஷான் தேவ் என் ஆளோட செருப்ப காணோம் திரைப்படத்தில் சிறந்த இசையை அமைப்பதற்காக பல்வேறு பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

பாடகராகவும்

பாடகராகவும்

இவ்வாறு மலையாளம் தமிழ் திரைப்படங்களுக்கு இசையமைத்து வந்த இவர் கன்னடத்தில் வெளியான "சைலோ" திரைப்படத்தின் மூலம் பாடகராகவும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு சிறந்த இசையமைப்பாளராகவும் பாடகராகவும் பல பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.

பிறந்தநாள்

பிறந்தநாள்

தமிழ், மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் இசையமைப்பாளராகவும் பாடகராகவும் இருந்து வரும் இஷான் தேவ் ஆகஸ்ட் 13 ஆம் தேதியான இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி இவரது நண்பர்கள் ரசிகர்கள் என பலரும் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X