சாம் சி.எஸ் சீட்டிங் செய்தாரா?.. அப்போ ஓகே சொல்லிட்டு இப்போ நோ சொல்றாராம்.. கதறும் தயாரிப்பாளர்

சென்னை: கோலிவுட்டின் திறமை வாய்ந்த இசையமைப்பாளர்களில் ஒருவர் சாம் சி.எஸ். தற்போது டாப் 10 இடத்தில் ஜொலித்துக்கொண்டிருக்கிறார். ஏகப்பட்ட ஹிட் பாடல்களை கொடுத்திருக்கும் அவர் தற்போது ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். தயாரிப்பாளர் ஒருவர் பேசியிருக்கும் விஷயங்கள் தமிழ் சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஓர் இரவு என்ற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான சாம் சிஎஸ்ஸுக்கு விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த விக்ரம் வேதா திரைப்படம் பெரிய அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது. அந்தப் படத்தின் பாடல்களும், தீம் இசையும் பட்டித்தொட்டியெங்கும் ஒலித்தன. அந்தப் படத்தின் வெற்றி சாமுக்கு மிகப்பெரிய வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்தன. அவரும் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்டார்.

வரிசையாக ஹிட்டுகள்: விக்ரம் வேதாவில் அதிரடி இசையை காட்டிய அவர் இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் படத்தில் காதல் வலிக்கு தேவையான இசையை கொடுத்து இந்த ஜானரில் தான் ஒரு கிங்தான் என்பதை ரசிகர்களுக்கு உணர்த்தினார். அவரது கரியரிலேயே விக்ரம் வேதாவுக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து மெகா ஹிட்டான கைதி திரைப்படம்தான் முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது.

Composer Sam CS Faces Controversy After Producer Accuses Him of Refusing Credit
Photo Credit:

என்ன ஸ்பெஷல்?: அந்தப் படம் ஒரே இரவில் நடக்கும்படியாக உருவானது. அதன் காரணமாக அதில் பாடல்களுக்கு எல்லாம் வாய்ப்பே இல்லை. ரீ ரெக்கார்டிங்கிலிதான் அசத்த வேண்டும். இதனை மிக லாவகமாக அந்தப் படத்தில் நிகழ்த்தி காட்டினார். படம் எப்படி பெரிய ஹிட்டடித்ததோ அதேபோல் படத்தில் இடம்பெற்ற பின்னணி இசையும் பலரது மொபைலில் ரிங் டோன் மெட்டீரியலாக இருந்தது.

வேற்று மொழிகளிலும்: தமிழில் அவர் ஒரு குறிப்பிட்ட ஜானர் படத்துக்கு இசையமைப்பதில்லை. பார்த்திபன் போன்ற வித்தியாசமாக படும் எடுப்பவர்களுடனும் சேர்ந்து பணியாற்றுகிறார். அதேபோல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழி திரைத்துறையிலும் இசையமைத்து இந்தியா சுற்றும் இசையமைப்பாளராகியிருக்கிறார். புஷ்பா 2 படத்துக்கு அவர் பின்னணி இசை அமைத்திருந்தது கவனிக்கத்தக்கது. இந்நிலையில் அவர் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு வைத்திருக்கிறார்.

என்ன நடந்தது?: அதாவது படம் ஒன்றில் தனது பெயரை பயன்படுத்தப்படக்கூடாது என சாம் சிஎஸ் கூறுவதாக தயாரிப்பாளர் குற்றஞ்சாட்டியிருக்கிறார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சாம் சிஎஸ் எங்களிடம் பணம் வாங்கிவிட்டார். லாக் டவுனால் ஷூட்டிங் தடைபட்டது. ஒருவழியாக ஷூட்டிங்கை இப்போது முடித்துவிட்டோம். ஆனால் சாம் சிஎஸ்ஸோ, இதெல்லாம் சின்ன படம். அப்போது எனக்கு இருந்த நிலைமை வேறு இப்போது வேறு.

எனவே எனது பெயரை பயன்படுத்தக்கூடாது. அதற்கு பதிலாக என்னுடைய உதவியாளர் பெயரில் படத்தை ரிலீஸ் செய்யுங்கள் என சொல்கிறார். இது எந்த விதத்தில் நியாயம். பெரிய இசையமைப்பாளரின் பெயரை போட்டாலே மியூசிக் வியாபாரம் ஆகாது. இதில் இவரது உதவியாளர் பெயரை போட்டால் எனக்கு என்ன காசு வரும்" என்றார்.

More from Filmibeat

Read more about: sam cs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X