கண்டா வர சொல்லுங்க.. எமோஷனாக பதிவிட்ட சந்தோஷ் நாராயணன்.. தனுஷ் ரியாக்ஷன பாருங்க!

சென்னை: கர்ணன் படத்தில் இடம் பெற்றுள்ள கண்டா வர சொல்லுங்க பாடல் குறித்து சந்தோஷ் நாராயணன் பதிவிட்டுள்ள எமோஷனல் டிவிட்டுக்கு நடிகர் தனுஷ் பதில் அளித்துள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து டப்பிங் பணிகளும் நிறைவடைந்துவிட்டது.

கர்ணன் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் காதலர் தினத்தன்று கர்ணன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட் வெளியானது.

கண்டா வர சொல்லுங்க

கண்டா வர சொல்லுங்க

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்படத்தில் இடம்பெற்றுள்ள கண்டா வர சொல்லுங்க பாடலின் சிங்கிள் ட்ராக் வெளியிடப்பட்டது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

எமோஷனல் பதிவு

எமோஷனல் பதிவு

இந்த பாடல் யூட்யூப்பில் இதுவரை 6 மில்லியன் வியூஸ்களை கடந்துள்ளது. இந்நிலையில் படத்தின் இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன் கண்டா வர சொல்லுங்க பாடல் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் எமோஷனலாக ஒரு பதிவை ஷேர் செய்துள்ளார்.

தலை வணங்குகிறேன்

அதாவது, கண்டா வர சொல்லுங்க பாடலை நேசித்த மற்றும் ஆதரித்த உங்கள் அனைவரையும் நான் வணங்குகிறேன். கொண்டாடப்பட வேண்டிய பல நாட்டுப்புற கலைஞர்களுக்கு இது ஒரு பெரிய வெற்றியாகும். அனைவருக்கும் மிக்க நன்றி. கண்டா வர சொலுங்க பற்றி மாரி செல்வராஜ் உடனான எனது முதல் கலந்துரையாடலின் ஒரு கிளிக் இங்கே.. என இருவரும் டிஸ்கஸ் செய்யும் ஒரு போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

தனுஷ் ரியாக்ஷன்

இதனை பார்த்த நடிகர் தனுஷ், இன்னும் நிறைய வர இருக்கிறது என்று எங்களுக்குத் தெரியும். நம் மண் மற்றும் ஆன்மாவின் அத்தகைய தகுதியான திறமையாளர்களை அடையாளம் கண்டு அவர்களை உலகிற்கு காண்பித்ததற்கு நன்றி. கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் என பதிவிட்டுள்ளார்.

அமெரிக்காவில் தனுஷ்

அமெரிக்காவில் தனுஷ்

நடிகர் தனுஷ், ரூஸோ பிரதர்ஸ் இயக்கும் ஹாலிவுட் படமான தி கிரே மேன் படத்தில் நடித்து வருகிறார். இதற்காக கடந்த வாரம் குடும்பத்துடன் அவர் அமெரிக்கா புறப்பட்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X