GV Prakash - ஜி.வி. பிரகாஷை உருகி உருகி ரசிக்கும் பாலிவுட் நடிகை - வைரலாகும் புகைப்படம்

சென்னை: GV Prakash (ஜிவி பிரகாஷ்) எமர்ஜென்சி படத்திற்கு இசையமைக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு அதுகுறித்த அப்டேட்டை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் வெளியிட்டிருக்கிறார்.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத். நடிப்பதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் தனக்கு தோன்றியதை யாருக்கும் அஞ்சாமல் வெளிப்படையாக பேசுபவர். இதனால் அவர் மீது பலர் விமர்சனம் வைப்பதுண்டு. மேலும், அவர் இந்துத்துவா சிந்தனையுடையவர் எனவும் ஒருதரப்பினர் கூறுவது உண்டு.

Composing with Kangana Ranaut For Emergency songs and back ground score says gv prakash

தமிழில் கங்கனா ரணாவத்: ஹிந்தியில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத் தமிழில் ஜீவா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த தாம் தூம் படத்தில் நடித்தார். அதன் பிறகு தமிழில் இருந்து ஒதுங்கிய அவர் ஹிந்தியில் மட்டும் கவனம் செலுத்தினார். இதனையடுத்து அவரை மீண்டும் தலைவி படத்திற்காக தமிழுக்கு அழைத்து வந்தார் ஏ.எல்.விஜய்.

தலைவி கங்கனா ரணாவத்: தமிழ்நாட்டின் மறைந்த முதலமைச்சர் ஜெயலல்விதாவின் வாழ்க்கை வரலாறை அடிப்படையாக வைத்து உருவான படம்தான் தலைவி. இந்தப் படத்தில் ஜெயலலிதாவாக நடித்திருந்தார் கங்கனா ரணாவத். இள வயது ஜெயலலிதாவாக கங்கனாவின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. அதேசமயம் அரசியலுக்குள் நுழைந்த பிறகு இருக்கும் ஜெயலலிதாவாக கங்கனாவின் நடிப்பு பேசப்பட்டாலும் அவரது லுக் ஒத்துவரவில்லை என ரசிகர்கள் கூறினர்.

மீண்டும் தமிழில் கங்கனா ரணாவத்: இந்தச் சூழலில் கங்கனா ரணாவத் மீண்டும் தமிழில் களமிறங்கியிருக்கிறார். பி.வாசு இயக்கத்தில் தமிழில் வெளியாகி மாபெரும் ஹிட்டான சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகிவருகிறது. சந்திரமுகி பாகம் ஒன்றில் ஜோதிகா ஏற்றிருந்த கதாபாத்திரத்தை இதில் கங்கனா ரணாவத் ஏற்றிருக்கிறார். ஆனால் ஜோதிகாவின் நடிப்பை இவரால் ஈடு செய்ய முடியுமா என இப்போதே பலரும் கேள்வி கேட்க ஆரம்பித்திருக்கின்றனர்.

இருப்பினும், அவரது நடிப்பை தன்னால் ஈடு செய்ய முடியாது என சமீபத்தில் ட்விட்டர் பக்கத்தி ஓபனாக தெரிவித்திருந்தார் கங்கனா ரணாவத். அவருக்கான ஷூட்டிங் சமீபத்தில்தான் நடந்து முடிந்தது. அதுகுறித்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் ரொம்பவே உருக்கமாக பதிவிட்டிருந்தார் கங்கனா.

Composing with Kangana Ranaut For Emergency songs and back ground score says gv prakash

எமர்ஜென்சி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்கிறார் கங்கனா ரணாவத். படத்துக்கு எமர்ஜென்சி என்று பெயரிடப்பட்டுள்ளது. அதாவது இந்திரா காந்தி கொண்டு வந்த எமர்ஜென்சி காலத்தில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக இந்தப் படம் உருவாகிறது என கூறப்படுகிறது. ரித்தேஷ் ஷா திரைக்கதை மற்றும் வசனத்தை எழுத ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

எமர்ஜென்சி அப்டேட்: இந்நிலையில் எமர்ஜென்சி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஜிவி பிரகாஷ், "கங்கனா ரணாவத்தின் எமர்ஜென்சி திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையை உருவாக்கிவருகிறேன். இந்த பிரமாண்டமான திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது" என குறிப்பிட்டிருக்கிறார். மேலும் கீபோர்டில் அவர் இசையமைப்பது போலவும் அதனை கங்கனா ரணாவத் ரசிப்பது போன்று ஒரு புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ளார். அந்தப் புகைப்படம் இப்போது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X