'கான் சிட்டி' கலக்குது... அர்ஜுன் தாஸை மனம் திறந்து பாராட்டிய ஆதிக் ரவிச்சந்திரன்!
சென்னை: நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியாகியுள்ள 'கான் சிட்டி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக படத்தின் திரைக்கதை, அர்ஜுன் தாஸின் நடிப்பு மற்றும் ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களிடம் பாராட்டுகளை குவித்து வரும் நிலையில், பிரபல இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது சமூக வலைதளப் பதிவின் மூலம் அர்ஜுன் தாஸுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இருவரும் ஏற்கனவே 'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் இணைந்து பணியாற்றியிருந்த நிலையில், ஆதிக்கின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதாவது, தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி குரலாலும், வித்தியாசமான வில்லன் மற்றும் கதாநாயகன் கதாபாத்திரங்களாலும் ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகர் அர்ஜுன் தாஸ், தற்போது 'கான் சிட்டி' திரைப்படத்தின் மூலம் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். படம் வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருவதோடு, சமூக வலைதளங்களிலும் படத்திற்கு சாதகமான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
இப்படி இருக்கையில், 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் இயக்குநரான ஆதிக் ரவிச்சந்திரன் தனது எக்ஸ் தளத்தில் அர்ஜுன் தாஸுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், "Congratulations on this beautiful film brother @iam_arjundas. Fantastic reports all over. Wishing you and the entire team of #ConCity a blockbuster success" என்று பதிவிட்டுள்ளார்.

கான் சிட்டி: அதாவது, "அருமையான இந்தப் படத்திற்காக வாழ்த்துகள் சகோதரா அர்ஜுன் தாஸ். எல்லா இடங்களிலும் படத்திற்கு அற்புதமான வரவேற்பு கிடைத்து வருகிறது. 'கான் சிட்டி' படக்குழுவினர் அனைவருக்கும் பிளாக்பஸ்டர் வெற்றி அமைய வாழ்த்துகள்" என்று தனது பதிவில் ஆதிக் ரவிச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
அஜித்துக்கே வில்லன்: இந்நிலையில், ஆதிக் ரவிச்சந்திரனின் இந்த பதிவு ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. காரணம், சமீபத்தில் வெளியான 'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றியிருந்தனர். அந்தப் படத்தில் அர்ஜுன் தாஸ், கதையின் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் மட்டுமல்லாமல், இரட்டை வேடங்களில் தோன்றி தனது மிரட்டலான நடிப்பால் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றிருந்தார். அந்த கூட்டணிக்கு கிடைத்த வரவேற்பு காரணமாகவே, இருவருக்கும் இடையே நல்ல நட்பும் உருவாகியுள்ளதாக திரையுலகில் கூறப்படுகிறது.
மேலும், 'கான் சிட்டி' திரைப்படம் குறித்து தொடர்ந்து நேர்மறையான விமர்சனங்கள் வெளியாகி வரும் நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் போன்ற சக இயக்குநர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருவது படக்குழுவினருக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கூடுதல் கவனம்: 'குட் பேட் அக்லி' படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் அர்ஜுன் தாஸ் குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் பகிர்ந்துள்ள இந்த பாராட்டு பதிவு, இருவருக்கும் இடையேயான நட்பை மீண்டும் ரசிகர்களுக்கு நினைவூட்டியுள்ளது. அதேநேரத்தில், 'கான் சிட்டி' திரைப்படத்திற்கும் இது கூடுதல் கவனத்தை பெற்றுத் தந்துள்ளது என்பது மட்டும் உறுதி.


Click it and Unblock the Notifications