நடிகர் சங்கம் சார்பில் அஞ்சலி தேவி, நாகேஸ்வரராவுக்கு அஞ்சலி கூட்டம்!

By Shankar

சென்னை: மறைந்த நடிகை அஞ்சலிதேவி, நடிகர் நாகேஸ்வரராவ் ஆகிய இருவரின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் இரங்கல் கூட்டம் சென்னை ராணி சீதை ஹாலில் நேற்று மாலை நடந்தது.

தென்னிந்திய நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார், துணைத்தலைவர் விஜயகுமார், பொதுச் செயலாளர் ராதாரவி, பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகியோர் கலந்துக்கொண்டு அஞ்சலிதேவி-நாகேஸ்வரராவ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பேசினார்கள்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கேயார், 'பிலிம் சேம்பர்' பொருளாளர் கே.எஸ்.சீனிவாசன், பட அதிபர்கள் எடிட்டர் மோகன், சித்ரா லட்சுமணன், வாசுதேவன், 'கில்டு' தலைவர் ஹேம்நாக்பாபு, நடிகர் ராஜேஷ், நடிகைகள் ராதிகா சரத்குமார், நளினி, சத்யபிரியா, பாத்திமாபாபு, கவிஞர் பிறைசூடன், மற்றும் அஞ்சலிதேவியின் மகன்கள் சின்னாராவ், நிரஞ்சன்குமார் மருமகள்கள் விஜயலட்சுமி, பாரதிதேவி ஆகியோரும் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்கள்.

Condolence meeting for Nageswara Rao, Anjali Devi

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X